3வது டெஸ்ட்.. 2 இந்திய இளம் வீரர்கள் அறிமுகம்.. கண்ணீரோடு நின்ற தந்தை.. உருக்கமான நிகழ்வுகள்

0
284
Rohit

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் இன்று துவங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் நிகழ்வு நடைபெற்ற பொழுது அதில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார்.

- Advertisement -

இந்திய அடியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கேஎஸ்.பரத் நீக்கப்பட்டு, அவருடைய இடத்திற்கு 22 வயதான வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.

மேலும் ஒரு அறிமுக வீரராக மும்பை அணிக்கு விளையாடி வரும் வலது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த போட்டியில் விளையாடிய முகேஷ் குமார் இடத்தில் முகமது சிராஜ், அக்சர் படேல் இடத்தில் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாடுகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் தற்போது அமைந்துள்ள இந்திய பேட்டிங் யூனிட்டுதான் மிகவும் அனுபவம் அற்றதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வாய்ப்பை பெற்ற சர்ப்ராஸ் கானுக்கு தொப்பி கொடுத்தபொழுது, போட்டியை காண வந்த அவருடைய தந்தை கண்ணீர் மல்க நின்றிருந்தார். இந்த நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு உருக்கமானதாக அமைந்திருந்தது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசும்பொழுது ” நாங்கள் இந்த போட்டியில் நான்கு மாற்றங்களை செய்திருக்கிறோம். கடந்த இரண்டு போட்டி ஆடுகளங்களை விட இது மிகச் சிறப்பாக தெரிகிறது. ஆனால் இது போகப் போக பேட்டிங் செய்ய கடினமாக மாறும். முதல் இரண்டு போட்டிகளைப் போலவே மூன்றாவது போட்டியும் பரபரப்பானதாகவே இருக்கும். நாம் கவனத்தை இங்கே வைத்து நம்மால் என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பைக்கு.. நம்ம கேப்டன் இவர்தான்.. போகிற போக்கில் உண்மையை உடைத்த ஜெய்ஷா

இந்த ஆடுகளத்தை பொருத்தவரை கிரிக்கெட் வல்லுனர்கள் கூறும் பொழுது, பேட்ஸ்மேன்கள் விளையாடும் இடத்தில் சில விரிசல்கள் இருப்பதாகவும், ஆனால் அது உடனே பெரிய விரிசலாக மாறாது என்றும் கூறியிருக்கிறார்கள். மேலும் ஆடுகளத்தில் கொஞ்சம் புல் இருப்பதால், ஆரம்பத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கும் என கூறியிருக்கிறார்கள்.