119 ரன் 5 விக்கெட்.. துருவ் ஜுரல் பும்ரா கடைசி நேர கலக்கல்.. சேப் ஜோனில் இந்திய அணி

0
303
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது நாளில் மதிய உணவு இடைவேளை தாண்டி இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி இருக்கிறது.

நேற்று இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று ஆட்டம் இழக்காமல் இருந்த இரண்டு பேட்ஸ்மேன்களான குல்தீப் யாதவ் 5, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்து இன்று ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் துருவ் ஜுரல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணி 400 ரன்கள் கடப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார்கள்.

இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 89 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் உடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி கடைசி கட்டத்தில் மிகவும் தேவையான 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கு அடுத்து அறிமுக வீரர் துருவ் ஜுரல் சிறப்பாக விளையாடி 14 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கடைசி நேரத்தில் சிராஜை வைத்துக்கொண்டு பும்ரா கொஞ்சம் அதிரடி காட்டினார். கடைசி விக்கட்டாக 26 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இந்திய அணி 130.5 ஓவர்களில் 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் 27.5 ஓவர்களில் 114 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : WTC புள்ளி பட்டியல்.. நியூசி தெ.ஆ போட்டி முடிவு.. இந்திய அணிக்கு வந்த புதிய சிக்கல்

இந்த மைதானத்தில் குறைந்தபட்சம் முதல் இன்னிங்ஸில் 450 ரன்கள் ஆவது எடுக்க வேண்டும். இந்த நிலையில் இந்திய அணி 445 ரன்கள் குவித்து தற்பொழுது பாதுகாப்பான நிலையில் இருக்கிறது. மேற்கொண்டு பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.