WTC புள்ளி பட்டியல்.. நியூசி தெ.ஆ போட்டி முடிவு.. இந்திய அணிக்கு வந்த புதிய சிக்கல்

0
248
WTC

உள்நாட்டில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக நியூசிலாந்து அணி கைப்பற்றி இருக்கிறது.

இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தனது முதல் இடத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

- Advertisement -

மேலும் முதல் இரண்டு இடங்களில் இருந்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டு அணிகளும் தற்பொழுது கீழே வந்திருக்கின்றன. குறிப்பாக இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இரண்டு அணிகள் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும் இந்திய அணி இரண்டாவது இடத்திலும் இருந்த பொழுது, அடுத்தடுத்த இரண்டு இடங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இருந்தன.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதால் ஏதாவது ஒரு அணி தொடரை முழுமையாக வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாறுதல்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன.

- Advertisement -

இப்படியான நேரத்தில் சவுத் ஆப்பிரிக்காவில் டி20 லீக் நடைபெற்ற காரணத்தினால், நியூசிலாந்துக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அனுபவமே இல்லாத ஒரு புதிய அணியை தேர்ந்தெடுத்து தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சிகரமாக அனுப்பியது.

இதன் காரணமாக தற்பொழுது நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளையும் வென்று இருக்கிறது. மொத்தம் இதுவரை நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் நியூசிலாந்து ஒன்றை தோற்று மூன்றில் வென்று, வெற்றி சதவீதமாக 75 சதவீதத்தை பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு வந்திருக்கிறது.

இதன் காரணமாக புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகத்தின் முடிவின் காரணமாக, தற்பொழுது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு பிரச்சனை உண்டாகி இருக்கிறது. மேலும் உள்நாட்டில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் இந்திய அணி விரும்பிய வகையில் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பேட்டிங் செய்யாமலே இங்கிலாந்துக்கு 5 ரன்.. இலவசமாக கொடுத்த அஸ்வின்.. களத்தில் என்ன நடந்தது?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

நியூசிலாந்து – 75.00
ஆஸ்திரேலியா – 55.0
இந்தியா – 52.77
பங்களாதேஷ் – 50.0
பாகிஸ்தான் – 36.66
மேற்கிந்திய தீவுகள் – 33.33
தென்னாப்பிரிக்கா – 33.33
இங்கிலாந்து – 25.0
இலங்கை – 0.0