வெறும் 35 ரன்னுக்கு 7 விக்கெட்.. இங்கிலாந்தை சுருட்டிய அஸ்வின் குல்தீப்.. வெற்றி முகத்தில் இந்திய அணி

0
977
Ashwin

தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான முறையில், போட்டியின் இரண்டாவது பகுதியில் செயல்பட்டு ஆட்டத்தை கைக்குள் கொண்டு வந்திருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் ஆட்டம் இழக்காமல் 122 ரன்கள் எடுக்க 353 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தரப்பில் ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 307 ரன்கள் எடுத்து 46 ரன்கள் பின்தங்கியது. இந்திய அணிக்கு துருவ் ஜுரல் 90 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் இளம் சுழற் பந்துவீச்சாளர் சோயப் பஷீர் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலை உடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக காத்திருந்தது. அந்த அணியின் பென் டக்கெட் 15, ஒல்லி போப் 0, ஜோ ரூட் 11 எங்கள் என வரிசையாக ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியேற்றினார்.

இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்திருந்த ஜாக் கிரவுலி மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 இருவரையும் குல்தீப் யாதவ் ஆட்டம் இழக்க வைத்தார். இந்த நிலையில் தேநீர் இடைவேளையின் பொழுது 120 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

இந்த இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் துவங்கிய முதல் பந்தியிலேயே ரவீந்திர ஜடேஜா ஜானி பேர்ஸ்டோ 30 விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்து டாம் ஹார்ட்லி 7, ஒல்லி ராபின்சன் 0 என அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை மீண்டும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து பென் போக்ஸ் 17, ஜேம்ஸ் ஆண்டர்சன் 0 என இரண்டு விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்ற, இங்கிலாந்து அணி 145 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடைசி ஏழு விக்கெட்டுகளை வெறும் 35 ரன்னுக்கு இங்கிலாந்து இழந்து இருக்கிறது.

இதையும் படிங்க.: துருவ் ஜுரலுக்கு சேவாக் சர்ச்சை வாழ்த்து.. சர்பராஸ் கானுக்கு உள்குத்து.. வைரல் ஆகும் ட்வீட்

இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 15.5 ஓவர்கள் பந்துவீசி 51 ரன்கள் விட்டுத்தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 15 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து நான்கு விக்க கைப்பற்றினார்.