துருவ் ஜுரலுக்கு சேவாக் சர்ச்சை வாழ்த்து.. சர்பராஸ் கானுக்கு உள்குத்து.. வைரல் ஆகும் ட்வீட்

0
288
Sehwag

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் போட்டிக்குள் திரும்ப வந்திருக்கிறது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் மிகவும் தடுமாறிய பொழுது, இந்திய அணிக்காக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் முதிர்ச்சி, மன தைரியத்தோடு சிறப்பான முறையில் ஒரு இன்னிங்ஸ் விளையாடி முடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் துருவ் ஜுரல் 149 பந்துகளை சந்தித்து, ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 90 ரன்கள் குவித்தார். 177 ரன்னில் குல்தீப் யாதவ் உடன் ஆரம்பித்து இந்திய அணியை 307 ரன்களுக்கு கொண்டு வந்தார். மொத்தம் 130 ரன்னுக்கு மேற்கொண்டு கீழ் வரிசை பேட்மின்களுடன் இணைந்து அவர் திறமையாக விளையாடினார்.

இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த மகேந்திர சிங் தோனி இந்த வீரர்தான் என இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் பாராட்டி இருக்கிறார். அந்த அளவிற்கு அவருடைய இன்னிங்ஸ் பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி முன்னாள் துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்கும் துருவ் ஜுரலுக்கு தனது வாழ்க்கை தெரிவித்து இருக்கிறார். ஆனால் அந்த வாழ்த்தில் அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் தற்பொழுது சர்ச்சையாக மாறி வருகிறது.

சேவாக் தன்னுடைய வாழ்த்தில் கூறும் பொழுது “எந்த மீடியா விளம்பரமும் இல்லை. நாடகமும் இல்லை. சில அபூர்வ திறமைகள் கடினமான சூழ்நிலைகளில், மிக அமைதியாக தன்னை வெளிப்படுத்தியது. மிக அருமை துருவ் ஜுரல்” என அதில் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : 120/5 சிக்கிய இங்கிலாந்து.. அஸ்வின் குல்தீப் மேஜிக்.. தவறை திருத்துமா இந்திய அணி?

அவர் தன்னுடைய வாழ்த்தில் பயன்படுத்திய மீடியா விளம்பரம் மற்றும் நாடகம் போன்ற வார்த்தைகள், சர்பராஸ் கானை குறிப்பிட்டு மறைமுகமாக பேசி உள்ளதாக தற்பொழுது சமூக வலைதளத்தில் சர்ச்சை உருவாகி வருகிறது.

- Advertisement -