177/7 to 307.. இந்திய அணியை கட்டி இழுத்த துருவ் ஜுரல்.. எதிரணியும் பாராட்டும் இன்னிங்ஸ்

0
1365
Jurel

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கடைசிக் கட்ட பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுக்க, இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 219 ரன்களுக்கு ஏழு விக்கெட் இழந்து மிகவும் நெருக்கடியான நிலையில் சிக்கி இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று நேற்று களத்தில் இருந்த துருவ் ஜுரல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்கள். குல்தீப் யாதவ் 131 பந்துகள் சந்தித்து 28 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு பெரிய உதவியை செய்தார். இந்த ஜோடி 26 ரன்கள் எட்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கு அடுத்து ஒன்பதாவது விக்கட்டுக்கு ஆகாஷ் தீப் மற்றும் குரூப் ஜுரல் இருவரும் சேர்ந்து மீண்டும் 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்தார்கள். ஆகாஷ் தீப் 9 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து சிராஜ் உள்ளே வர துருவ் ஜுரல் அதிரடியில் ஈடுபட ஆரம்பித்தார். இந்த நிலையில் டாம் ஹார்ட்லி வீசிய மிகச் சிறப்பான பந்து ஒன்றில், 149 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 90 ரன்கள் எடுத்து துருவ் ஜுரல் தனது முதல் சர்வதேச சதத்தை தவறவிட்டார்.

- Advertisement -

ஆனாலும் கூட அவருடைய இன்னிங்ஸ் மிகச் சிறந்த ஒன்றாக எதிரணியாலும் பார்க்கப்படுகிறது. ஜோ ரூட் அவர் ஆட்டம் இழந்ததும் அவரைப் பாராட்டி வழி அனுப்பி வைத்தார். இதேபோல் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் அனைத்து வீரர்களும் எழுந்து வந்து அவரை பாராட்டி வரவேற்றார்கள்.

இதையும் படிங்க : துருவ் ஜுரல் போராடி முதல் அரைசதம்.. மொத்த இந்திய அணியும் பாராட்டு.. சல்யூட் செய்து ஏற்றுக் கொண்டார்

தற்போது இந்திய அணி 37 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணியை விட முதல் இன்னிங்சில் 46 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணியை பந்துவீச்சில் எப்படி சுருட்டுகிறது என்பதை பொறுத்து பற்றி அமையும். மேலும் இங்கிலாந்து அணியின் தரப்பில் இளம் வீரர் சோயப் பஷீர் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக சிவப்பு பந்தில் 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.