AUSvsNZ.. வரலாற்று பார்ட்னர்ஷிப்.. கேமரூன் கிரீன் அதிரடி.. ஸ்மித்துக்கு நடந்த சோகம்

0
828
Australia

நியூசிலாந்து தனது மண்ணில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் மிகவும் கடுமையான நெருக்கடியை கொடுத்தது. ஸ்மித் துவக்க வீரராக சென்று விட்டதால், அவருடைய இடத்தில் கேமரூன் கிரீன் விளையாட வந்தார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீனை கொண்டு வந்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. ஆனால் அவர் நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் பத்தாவது விக்கெட் கேமரூன் கிரீன் மற்றும் ஹேசில்வுட் ஜோடி 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் பத்தாவது விக்கெட் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக பதிவு செய்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 383 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு மேல் வரிசையில் இருந்து ரன்கள் வரவில்லை. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கலக்கிய கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் டக் அவுட் ஆனார்கள்.

- Advertisement -

அந்த அணிக்கு எப்பொழுதும் ஆபத்தில் காப்பாற்றும் டேரில் மிட்சல் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். டாம் ப்ளூன்டல் 31, கடைசிக் கட்டத்தில் மேட் ஹென்றி 41 ரன்கள் எடுக்க, தாக்குப் பிடித்து விளையாடிய கிளன் பிலிப்ஸ் 71 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. முதல் இந்தியனாக ஜெய்ஸ்வால் செய்ய இருக்கும் மெகா சாதனை.. மாறும் ரெக்கார்ட் பட்டியல்

24 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 13 ரன்களுக்கு ஸ்மித் 0, லபுசேன் 2 ரன்கள் என இரண்டு விக்கெட் இழந்திருக்கிறது. ரன் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்ட் முறையில் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு விக்கெட்டையும் சவுதி கைப்பற்றினார். தற்பொழுது போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.