திடீர் அறிமுகத்தில் கலக்கிய இந்திய டாக்சி டிரைவர் மகன்.. கேப்டன் மார்ஸ் பாராட்டு!

0
1616
Marsh

ஆஸ்திரேலியா அணி ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு, நீண்ட ஓய்வில் இருந்து வந்தது. தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது!

ஆஸ்திரேலியாவின் இந்த தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று டர்பன் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய தரப்பில் நான்கு வீரர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் இந்திய டாக்ஸி டிரைவர் மகனான தன்வீர் சங்கா. சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா திடீர் உடல்நிலை குறைவால் நேற்று விளையாட முடியாமல் போய்விட்டது. அவருக்கு பதிலாக இந்த வலது கை சுழற் பந்துவீச்சாளர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

நேற்றைய போட்டியில் இரண்டாவதாக பந்து வீசிய ஆஸ்திரேலியா அணிக்கு நான்கு ஓவர்கள் பந்துவீசி 31 ரன்கள் விட்டு தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கேப்டன் எய்டன் மார்க்ரம், ஒரே ஓவரில் டிவால்ட் பிரிவிஸ் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் என அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தியது, இறுதியாக மார்க்கோ யான்சன் விக்கெட்டை கைப்பற்றி ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்தினார்.

இவரது அதிரடியான பந்துவீச்சுதான் தென் ஆப்பிரிக்காவை 115 ரன்களுக்கு சுருட்டி, ஆஸ்திரேலியாவை 116 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. அறிமுகப் போட்டியிலேயே ஆடம் ஜாம்பாவின் இடத்தை இவர் நிரப்பு இருப்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை மகிழ்ச்சி படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசிய கேப்டன் மார்ஸ்
“தன்வீர் சங்காவின் இதயத்துடிப்பு 100க்கு மேல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரை நாங்கள் ஜிம்மில் பார்த்த பொழுது அவர் மிகவும் இயல்பாக இருந்தார். மேலும் அவர் எதற்கும் செல்ல தயாராகவும், எதையும் எளிமையாகவும் வைத்திருப்பது தெரிகிறது. இது அவரை நல்ல நிலையில் வைத்திருக்கும்.

உயர் மட்ட கிரிக்கெட்டில் இது அவருக்கு தேவையான ஒன்று. அவரது நடத்தை மிக அருமையாக இருக்கிறது. அவர் அறிமுகமானதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் அழகான புன்னகையுடன் இருக்கிறார். எனவே இன்னும் பல ஆண்டுகள் நாங்கள் அதைப் பார்க்கலாம்.

ஜாம்பாவை போல இவரும் எங்களுக்கு விக்கெட்டை எடுப்பவர். நாங்கள் இவரை மிடில் ஓவர்களில் பயன்படுத்துகிறோம். இவரிடம் பேட்ஸ்மேன் கடுமையாக ரன்களுக்கு போவார்கள். இவர் பெரிய ரன்களை விட்டுத் தரும் நாளும் வரும்.ஆனால் நாங்கள் இவரை மீண்டும் தேர்வு செய்வோம். ஜாம்பாவின் இடத்தில் இன்று இவர் வந்து செயல்பட்ட விதம் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல செய்தி!” என்று கூறி இருக்கிறார்!