விராட் கோலிக்கு விரித்த அதே சைக்காலஜிக்கல் வலை.. பென் ஸ்டோக்ஸ்க்கு ஆஸி பிளான் – ஸ்மித் பேச்சு

0
26
Virat

நாளை ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் ஆசஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக தங்கள் எப்படி செயல்படுவோம் என்பது குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியிருக்கிறார்.

கிரிக்கெட் உலகில் வரலாற்று சிறப்புமிக்க ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடர் நாளை ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே துவங்க இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து வீரர் சர்ச்சை பேச்சு

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தி தண்டனை பெற்ற ஸ்டீவ் ஸ்மித்தை, அதை வைத்து இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மீடியாக்கள் உளவியலாக தாக்க வேண்டும் கூறியது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக தாங்கள் எப்படி செயல்பட போகிறோம் என்பது குறித்து ஆஸ்திரேலியா தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சூசகமாக தெரிவித்திருக்கிறார். விராட் கோலிக்கு எதிராக ஒரு காலகட்டத்திற்குப் பிறகு ஸ்லெட்ஜிங் செய்வதை ஆஸ்திரேலிய வீரர்கள் கைவிட்டனர். காரணம் அப்படி செய்தால் விராட் கோலி மிகவும் சிறப்பாக விளையாடுகிறார் என்பதால் செய்யாமல் விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கோபப்படக் கூடாத நபர்

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசும்பொழுது “இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் இருவரது பொறுப்பின் கீழ் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் விளையாடும் அதிரடியான பாணி அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அதேபோல பென் ஸ்டோக்ஸ் நீங்கள் அதிகம் கோபப்படக்கூடாத ஒரு நபர்”

இதையும் படிங்க : கொல்கத்தா ஆடுகளம்.. கம்பீர் அவருக்காக பழியை ஏற்றுக் கொண்டார்.. நடந்ததே வேற – இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

“அவர் எங்களுக்கு எதிராக சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை மாற்றி இருக்கிறார். எங்களிடமிருந்து சில நேரங்களில் ஆட்டத்தை எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். அவரால் அதைச் செய்ய முடிந்திருக்கிறது. இந்த முறை அப்படி அவரை எதுவும் செய்ய விடாமல் அமைதியாக முடியும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -