தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தை சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக கம்பீர் கேட்கவில்லை என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் கூறியிருக்கிறார்.
இந்த போட்டிக்கான ஆடுகளத்தை தாங்களே சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக கேட்டதாகவும், அதன் காரணமாகவே தங்களுக்கு இப்படியான ஆடுகளம் கொடுக்கப்பட்டதாகவும் மொத்த பழியையும் கம்பீர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த விமர்சனங்கள்
இந்த நிலையில் சுழல் பந்து வீச்சுக்கு மிகச் சாதகமான ஆடுகளத்தை வாங்கியது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என வெளியில் இருந்து பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனம் மொத்தமாக இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது திரும்பி இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் பேசும் பொழுது ” கடைசி போட்டியில் ஆடுகளம் குறித்த அத்தனை பழிகளையும் கம்பீர் தானே ஏற்றுக் கொள்வதாக கூறினார். ஆடுகள அமைப்பாளர்கள் மீது பழி சொல்லக்கூடாது என்பதற்காகவே அவர் மொத்த பழியையும் தானே ஏற்றுக் கொண்டார்”
இதை எதிர்பார்க்கவில்லை
“இந்த குறிப்பிட்ட ஆடுகளம் முதல் நாள் முடிவிலேயே உடைவது போல காணப்பட்டது. மண் அதிகமாக உள்ளிருந்து வெளியில் வந்தது. நாங்கள் சுழல் பந்துவீச்சுக்கு நான்காவது நாளில் இருந்தோ அல்லது மூன்றாவது நாள் மதியத்தில் இருந்தோ சாதகம் இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் இப்படி முதல் நாளில் இருந்தே உடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை”
இதையும் படிங்க : பிசிசிஐ டெஸ்ட் தோவிக்கு பொறுப்பேற்க வேண்டும்.. அணி நிர்வாகிகள் சுத்த வேஸ்ட்.. முன்னாள் வீரர் கருத்து
” நாங்கள் சுழல் பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகத்தை எதிர்பார்ப்போம். ஏனென்றால் எங்களுடைய பலம் அதுவாகத்தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் அதை முதல் நாளில் இருந்து எதிர்பார்ப்பது கிடையாது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் கூட நாங்கள் அப்படியான ஆடுகளத்தை அமைக்கவில்லை” என்று விளக்கம் தந்திருக்கிறார்.






