48 வருட உலக கோப்பை வரலாற்றில் முகமது சமி மாஸ் அதிரடி சாதனை.. இந்தியர்கள் யாரும் செய்யாத மெகா ரெக்கார்ட்!

0
1960
Shami

இன்று உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் முக்கியமான போட்டி தரம்சாலா மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிக்கு டாசில் வெற்றி பெற்ற ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சர்துல் தாக்கூர் வெளியே போக, சூரியகுமார் யாதவ் மற்றும் முகமது சமி இருவர் உள்ளே வந்தார்கள். நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

- Advertisement -

வேகப் பந்துவீச்சுக்கு ஆரம்பத்தில் சாதகமான சூழ்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். நியூசிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் கான்வே ரன் ஏதும் இல்லாமலும், வில் யங் 17 ரங்களிலும் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். சமி ஓவரில் ரச்சின் ரவீந்தரா கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவற விட்டு அதிர்ச்சி அளித்தார்.

மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி இருவரும் அரை சதத்தை தாண்டினார்கள். மீண்டும் முகமது சமி பந்துவீச்சுக்கு வந்து ரச்சின் ரவீந்தராவை 75 ரன்களுக்கு வெளியேற்றினார். இந்த ஜோடி 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய டேரில் மிட்சல் சதம் அடித்தார். 35 வது ஓவருக்கு மேல் இந்திய பந்துவீச்சாளர்கள் திரும்பி வந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பதிலடி தர ஆரம்பித்தார்கள்.

டாம் லாதம் 5, பிலிப்ஸ் 23, சான்ட்னர் 1, மேட் ஹென்றி 0, டேரில் மிட்சல் 130, பெர்குசன் 1, போல்ட் 0* என ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழந்து நியூசிலாந்து அணி 273 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி 10 ஓவர் பந்துவீசி 54 ரன்கள் விட்டு தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் முகமது சமிக்கு இது இரண்டாவது ஐந்து விக்கெட் ஆகும். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

மேலும் 48 வருட ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை ஐந்து விக்கெட் எடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற அரிய சாதனையை படைத்திருக்கிறார். வேறு யாரும் இரண்டு முறை ஐந்து விக்கெட் கைப்பற்றியது கிடையாது.

இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் கபில் தேவ், நெக்ரா, வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு முறை உலகக்கோப்பையில் ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!