நடப்பு ஐபிஎல் தொடரின் 37வது போட்டியில் பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது.
இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு முதல் விக்கட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் 5.3 ஓவர்களில் கிடைத்தது. துவக்க ஆட்டக்காரராக வந்த பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இங்கிருந்து அப்படியே பஞ்சாப் கிங்ஸ் அணி தடம் புரண்டது. கேப்டன் சாம் கரன் 19 பந்துகளில் 20 ரன்கள்மேல் வரிசையில் எடுக்க, பேட்டிங்கின் கீழ் வரிசையில் ஹர்பரித் பிரார் அதிரடியாக விளையாடி 12 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பஞ்சாபின் அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மேலும் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழக வீரர் சாய் கிஷோருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இவரோடு சேர்த்து மொத்தம் நான்கு தமிழக வீரர்கள் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடினார்கள். சாய் கிஷோர் 4 ஓவர்கள் பந்துவீசி 33 ரன்கள் விட்டுத்தந்து நான்கு விக்கெட் கைப்பற்றி, பஞ்சாப் கிங்ஸ் அணியை சரித்தார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சகா 11 பந்தில் 13 ரன்கள், கேப்டன் கில் 29 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த தமிழக வீரர் சாய் சுதர்ஷன் அவர் பங்குக்கு பொறுமையாக 34 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 4(6), ஓமர்சாய் 13(10), ஷாருக் கான் 8(4), ரஷீத் கான் 3(3) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதையும் படிங்க : நான் பேட்டிங் பண்ணப்பவே பவுலிங் பிளான் பண்ணிட்டேன்.. டிகேவை இப்படித்தான் வெளியே அனுப்பினேன் – ரசல் பேட்டி
இந்த நிலையில் ராகுல் திவாட்டியா பொறுப்புடன் விளையாடி கடைசி நேரத்தில் அதிரடியாக 18 பந்தில் 7 பவுண்டரிகள் உடன் 36 ரன்கள் எடுத்து, 19.1 ஓவரில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வெல்ல வைத்தார். பஞ்சாப் தரப்பில் ஹர்ஸல் படேல் 3, லிவிங்ஸ்டன் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். மேலும் இந்த போட்டியில் முதல் ஆறு ஓவர்களில் 56 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி, கடைசி 14 ஓவர்களுக்கு 84 ரன்கள் மட்டும் எடுத்து 9 விக்கெட் இழந்து தோற்றது குறிப்பிடத்தக்கது.