கல்லி கிரிக்கெட்டில் நாங்கள் நான் ஸ்ட்ரைக்கருக்கு அவுட் கொடுத்திருப்போம் – டுவிட்டரில் இங்கிலாந்து நிர்வாகத்திற்கு குறும்புத்தனமாக ரிப்ளை செய்த சச்சின் டெண்டுல்கர்

0
68

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 109 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி நேற்று 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 130* ரன்கள் எடுத்த நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அதிர்ஷ்டவசமாக லக்கி விக்கெட் எடுத்த ஜாக் லீச்

ஐம்பத்தி ஆறாவது ஓவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜாக் வீசிய பொழுது, நிக்கோல்ஸ் அந்த பந்தை ஸ்ட்ரைட் திசையில் அடித்தார். எதிர் முனையில் நின்று கொண்டிருந்த மிட்ச்செல் பேட்டில் அந்த பந்து பட்டு அப்படியே மேலே சென்றது. பீல்டிங் செய்து கொண்டிருந்த அலெக்ஸ் லீஸ் அந்த பந்தை பிடிக்க நிக்கோல்ஸ் துரதிஷ்டவசமாக அவுட்டானார். வித்தியாசமான முறையில் அதிர்ஷ்டவசமாக ஜாக் லீச்சுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

- Advertisement -

இந்த வீடியோவை எங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டது. இந்த வீடியோ தற்பொழுது கூட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

வீடியோவுக்கு கமெண்ட் செய்த சச்சின் டெண்டுல்கர்

இங்கிலாந்து நிர்வாகம் வெளியிட்ட அந்த வீடியோவை குறிப்பிட்டு சச்சின் டெண்டுல்கர் ஒரு கமெண்ட் செய்துள்ளார்.
” இதேபோல ஒரு நிகழ்வு கல்லி கிரிக்கெட்டில் நடந்திருந்தால், நாங்கள் நான் ஸ்ட்ரைக்கருக்கு ( அதாவது டேரில் மிட்செல்லுக்கு ) அவுட் கொடுத்திருப்போம்”, என சற்று நகைச்சுவை பொங்க தனது பதிவை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -