இந்த கோப்பை தோனிக்கு என்று விதி எழுத்தப்பட்டுவிட்டது.. என்னுடைய தோல்வி தோனியிடம் என்றால், அதை மனமார ஏற்றுக்கொள்வேன் – சிஷ்யன் ஹர்திக் பாண்டியா பேட்டி!

0
12062

‘நான் தோல்வியடைய வேண்டுமென்றால், அதை தோனியிடம் தோற்பதை மனமார ஏற்றுக்கொள்வேன். நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்.’ என்று பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

அகமதாபாத்தில் நடைபெற்ற பைனலில், குஜராத் டைட்டன்ஸ் அணி அவர்களது சொந்த மைதானத்தில் அபாரமான பேட்டிங் செய்து 214 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இலக்கையும் நிர்ணயித்தது.

- Advertisement -

இன்னிங்ஸ் நடுவே தீவிரமாக மழை பெய்து நின்றதால் போட்டி நடைபெற தாமதமானது. இறுதியாக போட்டி 15 ஓவராக மாற்றப்பட்டது. 15 ஓவர்களில் சிஎஸ்கே அணிக்கு 171 ரன்கள் புதிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ருத்துராஜ் மற்றும் கான்வே இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். ரகானே, ராயுடு இருவரும் அபாரமாக விளையாடிகொடுத்து ஆட்டம் இழந்தனர். சிவம் துபே கடைசி வரை நின்று நம்பிக்கை அளித்தார். கடைசியில் வந்த ஜடேஜா ஒரு சிக்ஸ் மற்றும் பௌண்டரி அடித்து மிகச் சிறந்த பினிஷ் செய்து கொடுத்தார். சிஎஸ்கே அணி அபாரமாக வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பை தூக்கியது.

துரதிஷ்டவசமாக, இறுதி ஓவர் இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்தபின் இரண்டாம் இடம்பிடித்த அணிக்காக பரிசுதொகையை பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,

- Advertisement -

“பவுலிங் பேட்டிங் பில்டிங் என அனைத்திலும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டோம்ம் நாங்கள் விளையாடியபோது, மனமார விளையாடினோம். கடைசிவரை போராடினோம். இவை அனைத்தையும் நினைத்து பெருமிதமாக இருக்கிறது.

எங்கள் அணியில் இருக்கும் ஒரு குறிக்கோள் என்னவென்றால், வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் அதை ஒன்றாகவே கொண்டாடுவோம். இன்று நாங்கள் விளையாடிய ஆட்டத்திற்கு எந்தவித காரணமும் சொல்லப்போவதில்லை. சிஎஸ்கே அணி எங்களைவிட சிறப்பாக விளையாடியதால் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.

பேட்டிங்கில் நாங்களும் நன்றாக விளையாடினோம். குறிப்பாக சாய் சுதர்சன்-க்கு இந்த இடத்தில் என்னுடைய பாராட்டுகளை சொல்ல வேண்டும். இளம் வயதில், இப்பேர்ப்பட்ட அழுத்தம் நிறைந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவது அவ்வளவு எளிதல்ல.

இருக்கும் ஒவ்வொரு வீரர்களுக்கும் பக்க பலமாக இருந்து வருகிறோம். அவர்களுக்கு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். அவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது அவர்களது உழைப்பிற்கு கிடைத்த பரிசு. இந்த சீசன் முழுவதும் மோகித் சர்மா, ரசித் கான், முகமது சமி என அனைவரும் வேண்டிய நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு கொடுத்தார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள் சென்றாக வேண்டும்.

(தோனி குறித்து) தோனி கோப்பையை வென்றது நினைத்து பெருமிதமாக உணர்கிறேன். அவர் வெல்ல வேண்டும் என்று விதியில் எழுதப்பட்டு இருக்கிறது. நான் தோல்வியை தழுவ வேண்டும் என்றால், அது தோனியிடம் என்று வரும் பொழுது தாராளமாக தோல்வியை ஏற்றுக்கொள்வேன். நல்லவர்களுக்கு எப்போதும் நல்ல விஷயம் நடக்க வேண்டும். நான் கண்டதிலேயே மிகச் சிறந்த மனிதர் அவர். கடவுள் அனைவருக்கும் இறக்கத்துடன் இருக்கிறார். இன்று என் மீதும் இரக்கம் காட்டினார். ஆனால் இன்று தோனியின் இரவு. அவருக்காக இன்று மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.” என்றார்.