“நான் எல்லோரையும் முட்டாள் ஆக்க பார்க்கிறேன்!” – டேவிட் வார்னர் கொடுத்திருக்கும் அதிரடி ஸ்டேட்மென்ட்.. காரணம் என்ன?

0
445
Warner

நடப்பு உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் எதிர்பார்க்காத வீரர்கள்தான் பேட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் தென் ஆப்பிரிக்காவின் துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் மற்றும் ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இருவரும் மிகவும் முக்கியமானவர்கள்.

- Advertisement -

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இவர்கள் இருவரும் ஆறு போட்டிகளில் நானூறு ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார்கள். ஆனால் முன்னாள் வீரர்கள் உலக கோப்பைக்கு முன்பாக கணித்ததில் சுப்மன் கில், பாபர் அசாம் போன்றவர்கள்தான் அதிக ரன் குவிப்பவர்களில் முன்னணியில் இருந்தார்கள்.

மேலும் டேவிட் வார்னர் ஓய்வு குறித்து அவர் செல்லும் இடமெல்லாம் கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் டேவிட் வார்னரை இந்த ஓய்வு குறித்த கேள்விகள் மிகவும் எரிச்சல் அடைய வைத்தது.

இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது இப்படியான ஓய்வு குறித்த கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக பதில் அளித்து இருந்தார். அதில் டிசம்பர் மாதம் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதோடு தான் ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார். மேலும் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கும் டி20 உலக கோப்பையில் தான் விளையாட மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் டேவிட் வார்னர் தன்னுடைய மொத்த அணிக்கும் உத்வேகத்தை அளிக்கும் விதமாக பேட்டிங்கில் மட்டும் இல்லாது களத்தில் மொத்தமாக ஆற்றலை வெளிப்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் எல்லோரையும் முட்டாள் ஆக்க பார்க்கிறேன். நான் பேட்டிங்கில் முன்னாள் சென்று சிறப்பாக விளையாடும் பொழுது அடுத்து வரக்கூடியவர்கள் என்னைத் தொடர்ந்து அதைத் தொடர்கிறார்கள். நான் என்னால் முடிந்தவரை நன்றாகச் செய்கிறேன்.

நான் களத்திற்குள் சென்று என்னால் முடிந்ததை செய்யும் பொழுது, எனக்கு பின்னால் ஹெட் மற்றும் மார்ஸ் இருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. நான் உருவாக்கும் அழுத்தத்தை அவர்கள் எதிர் அணியின் மீது அப்படியே தொடர்கிறார்கள்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி நன்றாக இருக்கும். அவர்கள் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை எனும் பொழுது சிறப்பாக விளையாடுவார்கள். எனவே இங்கிலாந்து ஆபத்தான அணிதான். அவர்களிடம் சில உலகத்தரமான வீரர்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் 11 பேரும் பேட்டிங் செய்வார்கள். மேலும் அவர்களிடம் நல்ல பவுலிங் யூனிட்டும் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!