“நான் முன்ன மாதிரி கிடையாது.. இப்ப என்னோட வேலையே இதுதான்!” – ருதுராஜ் சுவாரசிய தகவல்!

0
81
Ruturaj

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி அங்கு டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க இருக்கிறது. இதில் டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் கெய்க்வாட் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் குறித்து சுவாரசியமான தகவலை பகிர்ந்து உள்ளார்.

இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. டி20 அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இந்திய மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தார். இந்திய அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டு, நிறைய இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணியும் உலகக்கோப்பை அரை இறுதித் தோல்விக்குப் பிறகு, சில மாற்றங்களைச் செய்துள்ளது. தென்னாபிரிக்க அணிக்கு மார்க்கம் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே இந்தத் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். எனவே இந்திய அணி ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறக்குகிறது. இதில் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே டி20 கிரிக்கெட்டின் துடிப்பைப் புரிந்து கொண்டார்.

ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியுடன் விளையாடிய அனுபவம் அவருக்குப் பெரிதும் உதவுகிறது. அவர் சூழ்நிலையை சரியாக உணர்ந்து மிகவும் அமைதியாக தனது இன்னிங்ஸை தொடங்குகிறார்.

- Advertisement -

இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் ஜெய்ஸ்வால் குறித்து பேசிய ருத்துராஜ் சில சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர்
“பெரும்பாலும் முதல் பந்தில் இருந்து தாக்குதல் ஷாட்களுக்குச் செல்வது ஜெய்ஸ்வால்தான். அவர் ஒரு அதிரடியான தொடக்க ஆட்டக்காரர். எந்த சூழ்நிலையிலும் தனது அதிரடியைக் கைவிடாதவர். நான் சில நேரங்களில் அபாயங்களை கண்டறிந்து அணிக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்ப சரியாக விளையாட வேண்டும்.

மறுமுனையில் ஜெய்ஸ்வால் போன்ற ஆட்டக்காரர் அதிரடியாக விளையாடும் பொழுது, நான் ஒரு முனையைப் பிடித்து அவர் விரும்பும் நேரத்தில் அவரை வெளிப்படுத்த அனுமதிப்பது எனக்கு மிகவும் முக்கியமானது. ராஜஸ்தான் ராயல்ஸ் பவர் ஹிட்டருடன் பேட்டிங் செய்வதை நான் மிகவும் விரும்புகிறேன். மேலும் தென்னாப்பிரிக்காவில் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்வதில் மிகவும் நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்த தொடக்க ஜோடி சிறப்பாக விளையாடியது. ருத்ராஜ் 159 ஸ்ட்ரைக் ரைட்டில் 122 ரன்களும், ஜெய்ஸ்வால் 138 ரன்களும் விளாசினர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்த ஜோடி எவ்வாறு விளையாடுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.