வீடியோ: “அடிக்கிற மூடே போயிடுச்சு” அரைசதம் அடித்தபிறகு புலம்பிய சூரியகுமார் – ஸ்டம்ப் மைக்கில் வசமாக சிக்கிய பேச்சு!

0
19610

அரைசதம் அடித்த பிறகு, ‘அடிக்கும் மனநிலை போய்விட்டது’ என்று ஸ்டம்ப் மைக்கில் சூரியகுமார் புலம்பிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வரும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் மிகச் சிறப்பான துவக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 78 ரன்கள் அடித்தது.

- Advertisement -

கே எல் ராகுல் 33 பந்துகளில் 57 ரன்கள் விலாசினார். ஆறு பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் இதில் அடங்கும். அடுத்ததாக உள்ளே வந்த விராட் கோலி 13 பந்துகளில் 19 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா 15 ரன்களுக்கு வெளியேறினார்.

சூரியகுமார் யாதவ் தனது சிறப்பான பார்மை இப்போட்டியிலும் வெளிப்படுத்தி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இவர் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்திருக்கிறார். கடைசியில் இரண்டு பந்துகள் மீதம் இருக்கும்பொழுது உள்ளே வந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்திருந்தது.

- Advertisement -

29 பந்துகளில் அரை சதம் கடந்த சூரியகுமார் யாதவ், பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, “பந்துவீச்சை எதிர்கொண்டு அடிக்கும் மனநிலையை போய்விட்டது.” என பேசியுள்ளார். இது ஸ்டம்ப் மைக்கில் மிகத் தெளிவாக கேட்டது. தற்போது இந்த நிகழ்வின் வீடியோ பதிவு சமூக வலைதள பக்கங்களில் பரவலாக பகிரப்பட்டு சிரிப்பையும் ஏற்படுத்துகிறது.

187 ரன்கள் இலக்கை துறத்தி வரும் ஆஸ்திரேலியா அணி எட்டு ஓவர்கள் முடிவில் 72 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் இழந்து இருக்கிறது கேப்டன் ஆர் 15 மற்றும் ஸ்மித் இருவரும் களத்தில் நிற்கின்றனர்.

- Advertisement -