“தோல்விக்கு பயப்படவே மாட்டேன்.. நான் செஞ்ச இதுதான் வெற்றிக்கு காரணம்?” – பென் ஸ்டோக்ஸ் மாஸ் பேட்டி

0
190
Stokes

இங்கிலாந்து அணி சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடி வரும் முறைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்தாலும், முன்னாள் வீரர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடையாது. விமர்சனங்கள் எப்போதும் அதைச் சுற்றி இருந்து கொண்டே இருக்கும்.

இப்படியான நிலையில்தான் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய சூழ்நிலையில் இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட பென் ஸ்டோக்ஸ் அணி இந்தியா வந்தது.

- Advertisement -

இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமில்லாமல் இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் தங்களுடைய அணி வெற்றி பெறும் என நம்பிக்கையற்றவர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய பேச்சுகள் அப்படியாகவே இருந்தது.

இப்படியான நிலையில்தான் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி பாஸ்பால் முறையில் விளையாடிய அபார வெற்றி பெற்று இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டும் எடுத்து 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி, இந்திய அணிக்கு 230 ரன்கள் இலக்காகக் கொடுத்து, இந்திய அணியை 202 ரன்னில் மடக்கி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் “நான் கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து, நாங்கள் எங்கே விளையாடுகிறோம் யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்பதில், எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. இங்கு முதல் முறையாக நான் கேப்டன் ஆக வந்திருக்கிறேன். ஆனால் நான் இந்தியாவில் சிறந்த பார்வையாளனாக இருந்திருக்கிறேன். களத்தில் இந்தியா எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்து இருக்கிறேன். அனைவருக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

டாம் ஹார்ட்லி அறிமுகவீரராக வந்து 9 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதேபோல் தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு பிறகு வந்து போப் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடுகிறார்.

இதையும் படிங்க : “பும்ரா-சிராஜ் 5வது நாளுக்கு போய் இருக்கனும்.. தொப்பியை கழட்டி அவரை பாராட்டறேன்” – ரோகித் சர்மா பேச்சு

என்ன நடந்தாலும் ஹார்ட்லிக்கு நீண்ட ஸ்பெல் கொடுக்க நான் தயாராக இருந்தேன். அதுதான் அவர் ஏழு விக்கெட் வீழ்த்தி எங்கள் அணி வெல்வதற்கு காரணமாக இருந்ததா? என்றால் யாருக்கு தெரியும்? இந்திய துணைக்கண்டத்தில் ஒரு இங்கிலீஷ் வீரர் விளையாடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ் போப் விளையாடிய இன்னிங்ஸ் ஆகும்.

எங்களுடைய அணுகுமுறை என்னவென்றால், தோற்றால் அடுத்த நாள் காலையில் எழுந்து அதை விட்டு வெளியே வந்து அடுத்ததை பார்க்க வேண்டும். தோல்வி குறித்து நாங்கள் பயப்பட மாட்டோம். வெளியே சென்று உங்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும. நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்!” என்று கூறி இருக்கிறார்.