“பும்ரா-சிராஜ் 5வது நாளுக்கு போய் இருக்கனும்.. தொப்பியை கழட்டி அவரை பாராட்டறேன்” – ரோகித் சர்மா பேச்சு

0
374
Rohit

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது.

மேலும் போட்டியில் கிடைத்த முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. இந்திய சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வெல்வது மிகவும் கடினமானது என்கின்ற நிலையில், பாஸ் பால் முறையில் விளையாடும் இங்கிலாந்தால் வெல்லவே முடியாது என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் தான் தற்போது நடந்து முடிந்திருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு நாட்கள் இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் மீண்டும் திரும்ப வந்த இங்கிலாந்து அணி இந்திய அணியை தோற்கடித்து விட்டது.

மேலும் ஆடுகளமும் மோசமாக சுழற் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. சரியான முறையில் விளையாடும் பொழுது ரன்கள் கிடைக்கும் என்கின்ற அளவில் இருந்தது. எனவே போட்டியும் நான்காவது நாளுக்கு சென்றது. இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பான ஒன்றாக அமைந்திருந்தது. கடைசி விக்கட்டுக்கு வெற்றிக்கு பும்ரா மற்றும் சிராஜ் போராடி 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது ஆட்டத்தின் விறுவிறுப்பை கூட்டியது. ஆனால் அது வெற்றிக்கு போதவில்லை.

- Advertisement -

தோல்விக்கு பின் பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா “எங்கே தவறு நடந்தது என்று குறிப்பிடுவது மிகவும் கடினம். 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் நாங்கள் ஆட்டத்தில் முன்னணியில் இருப்பதாக நினைத்தோம். ஆனால் போப் விதிவிலக்கான பேட்டிங் செய்தார். வெளிநாட்டு வீரர் ஒருவர் இந்திய மண்ணில் விளையாடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ் அது.

நாங்கள் சரியான பகுதிகளில் பந்து வீசினோம். பந்து வீச்சாளர்கள் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தினார்கள். ஆனாலும் நீங்கள் உங்கள் தொப்பியை எடுத்துச் சென்று போப் இடம் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள் என்று பாராட்ட வேண்டும்.

இதையும் படிங்க : 92 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. இங்கிலாந்து சரித்திர வெற்றி

மொத்தத்தில் நாங்கள் ஒரு அணியாகத் தோல்வி அடைந்தோம்.நாங்கள் போதுமான அளவு பேட்டிங் செய்யவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் ஐந்தாவது நாளுக்கு போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். கீழ் வரிசை மிக நன்றாக போராடியது. போட்டியில் தைரியமாக இருக்க வேண்டும் ஆனால் நாங்கள் இல்லை என்பதாக நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.