“நான் இந்த 29 வயது இந்திய பேட்ஸ்மேனுக்கு பெரிய ஃபேன்.. பெரிய ஆளா வரனும்” – ஏபி.டிவில்லியர்ஸ் பேட்டி!

0
310
ABD

2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் மூத்த வீரர்களை இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஒதுக்கி வைத்தது.

இதன் பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களைக் கொண்டு அதிரடியான அணுகு முறையைப் பின்பற்றும் ஒரு புதிய இந்திய டி20 அணியை உருவாக்குவதற்கான வேலைகளை கடந்த ஒரு வருடமாக செய்து வந்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் காயம் அடைந்திருக்கும் நிலையிலும், நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சிறப்பாக விளையாடியிருந்த காரணத்தினாலும், 14 மாதங்களுக்குப் பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்திய டி20 அணியை உருவாக்குவதில் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முடக்கப்பட்டு, மீண்டும் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டதோ அதே பழைய நிலையையே அடைந்திருக்கிறது.

மேலும் இதில் ஒரு புதிய மாற்றமாக தற்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு, அதே சமயத்தில் விக்கெட் கீப்பர்களாக ஜிதேஷ் சர்மா உடன் சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட சஞ்சு சாம்சன், முக்கியமான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்து தொடரை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா லெஜன்ட் ஏபி டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “நான் சஞ்சு சாம்சனின் மிகப்பெரிய ரசிகன்.அவர் ஒரு அற்புதமான வீரர் என்று நான் நினைக்கிறேன். அவர் பல ஆண்டு காலமாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை மீண்டும் இந்திய அணியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தென்னாப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக சஞ்சு சாம்சங் பற்றி பேசி இருந்த ஏபி.டிவில்லியர்ஸ் ” இந்திய அணியில் அவரை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் அவர் சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்களில் அவர் நிமிர்ந்து நின்று விளையாடக் கூடியவர் என்பதால் நன்றாக விளையாடலாம். எல்லா இந்திய பேட்ஸ்மேன்களும் சோதிக்கப்படுவார்கள். ஆனால் சஞ்சு போன்ற ஒருவர் ஏதாவது செய்வார்” என்று கூறியிருந்தார். அவர் கூறியது போலவே சஞ்சு சாம்சன் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!