“உங்களை முறியடிப்பேன்!” – உம்ரான் மாலிக்குக்கு பாகிஸ்தான் இளம் வேகப்பந்துவீச்சாளர் சவால்!

0
2762
Umran malik

உலகக் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் நாட்டை வேதப்பந்துவீச்சுக்கான தொழிற்சாலை என்று அழைப்பார்கள். அந்த அளவிற்கு அங்கு திறமையான வேகப் பந்துவீச்சாளர்களும் வேகமாக வீசக்கூடிய வேகப் பந்துவீச்சாளர்களும் வந்து கொண்டே இருப்பார்கள்!

வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் இவர்களைத் தொடர்ந்து வந்த சோயப் அக்தர்,சமி என்று வேகத்தில் கலக்கியவர்கள் ஏராளம். இதற்கு அடுத்து தற்பொழுது ஹாரிஸ் ரவுப் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடியவராக கிடைத்திருக்கிறார். மேலும் நதிம் ஷா, முகமது வாசிம், ஹஸ்னைன் என்று ஒரு பெரிய இளம் வேகப்பந்துவீச்சு படையே இருக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது பாகிஸ்தானில் நடந்து வரும் பி எஸ் எல் தொடரில் முல்தான் சுல்தான் அணிக்காக விளையாடி வரும் 20 வயதான வலது கை வேகப் பந்துவீச்சாளர் இசானுல்லாஹ் தனது சிறப்பான வேகப்பந்து வீச்சால் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார். கியோட்டா கிளாடியேட்டர் அணிக்கு எதிராக 12 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். மேலும் நான்கு போட்டிகளில் அவர் மொத்தம் 12 விக்கட்டுகள் வீழ்த்தி தற்பொழுது முதல் இடத்தில் உள்ளார்.

இந்த இளம் வேகபந்துவீச்சாளர் பிஎஸ்எல் தொடரில் சராசரி வேகத்தில் சாதனையை ஹரிஷ் ரவுப் கையில் வைத்திருக்க, அதை முதல் தொடரிலேயே வந்து முறியடித்து விட்டார். இவர் வீசிய முதல் ஓவரில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் 6 பந்துகளையும் வீசி அசத்தினார். மேலும் சராசரி வேகம் 146 இருந்தது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேத பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் இவரைப் பற்றி கூறும் பொழுது, இவருக்கு சரியான பயிற்சி அளித்தால் மேலும் இவர் சரியான உடற்பயிற்சிகளை செய்தால் இவரால் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீச முடியும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இந்த இளம் வீரர் இந்தியாவின் அதிவேகப்பந்துவீச்சாளரான இளம் உம்ரான் மாலிக்குக்கு ஒரு சவால் விட்டு இருக்கிறார். உம்ரான் மாலிக் இலங்கை இந்தியா வந்திருந்த தொடரில் 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அதிவேக இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையைத் தாண்டி நின்றார்.

தற்பொழுது பேசி உள்ள பாகிஸ்தான் இளம் வேகப் பந்துவீச்சாளர் இசானுல்லாஹ் “இறைவன் நாடினால், உம்ரான் மாலிக் பேசிய 156 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டி வீச முயற்சி செய்கிறேன். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதை என் இலக்காகக் கொண்டிருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள் உம்ரான் மாலிக்கை எப்படி தூண்டிவிடும்? இந்த இளம் வீரருக்கு முன்னால் உம்ரான் மாலிக் 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிவிடுவாரா? என்பது சுவாரசியமானது!