“என்னை பெத்தவங்களுக்காக பொறுமையா இருக்கேன்!” – ஜான்சன் குற்றச்சாட்டு பற்றி வார்னர் பேச்சு!

0
1524
Warner

பாகிஸ்தான அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மாற்றப்பட்டு, வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்துக்கு ஷாகின் அப்ரிடி, சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு ஷான் மசூத் கேப்டன்களாக கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஆரம்பக் கட்டம் என்கின்ற காரணத்தினால், இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமைகிறது.

- Advertisement -

மேலும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பெர்த் மைதானத்தில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது.

அதே சமயத்தில் சிட்னியில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. காரணம் ஆஸ்திரேலியா அணியின் சாம்பியன் வீரர் டேவிட் வார்னர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு ஆண்டு நடைபெற்ற வார்னருக்கு தேவையில்லாத மரியாதையெல்லாம் தரக்கூடாது என்று கடுமையான முறையில் ஆஸ்திரேலியா வீரர் மிட்சல் ஜான்சன் பேசி வருகிறார்.

- Advertisement -

இதுவரை இது குறித்து வாய் திறக்காத டேவிட் வார்னர் தற்பொழுது கூறும்பொழுது ” இப்படியான பேச்சுகளால் தற்பொழுது இந்த கோடை காலம் தலைப்புகள் ஏதும் இல்லாமல் இருக்காது. ஒவ்வொருவருக்குமே அவரது கருத்துக்களை கூற உரிமை உண்டு. நாங்கள் முன்னோக்கி செல்லும் பொழுது அடுத்து மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு காத்திருக்கிறோம்.

விமர்சனங்களை தவிர்ப்பதற்கு எனது பெற்றோர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் எனக்கு ஒவ்வொரு நாளும் கடினமாக உழைப்பதற்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் உலக அளவில் பெரிய மேடைக்கு வரும் பொழுது நிறைய விமர்சனங்கள் மீடியா மூலம் வரும். அதேபோல நிறைய பாசிட்டிவான விஷயங்களும் கிடைக்கும்.

இன்று நீங்கள் பார்க்கக் கூடியதில் மிகவும் முக்கியமான விஷயம் என்று என்ன நினைக்கிறீர்கள்? கிரிக்கெட்டை பார்ப்பதற்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே மைதானத்திற்கு வருவது தான் பெரிய விஷயம்!” என்று கூறி விமர்சனத்தை தவிர்த்திருக்கிறார்!