“சொந்த நாட்டில் மூன்று நாட்களில் டெஸ்ட் போட்டிகளை முடிக்கும் உங்களுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வேண்டுமா”? – இந்திய அணியை சரமாரியாக தாக்கிய ஹர்பஜன் சிங்!

0
483

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஏழாம் தேதி துவங்கிய நேற்றுடன் முடிவடைந்தது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது .

இந்தப் போட்டி தொடர் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது . கடந்த முறையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் இந்த முறை நிச்சயமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் சரண் அடைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

- Advertisement -

இந்திய அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னாள் வீரர்களும் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் சுடர்ந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் தங்களது கருத்துக்களை சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி வருகின்றனர்

இந்த தோல்வி குறித்து பேசி இருக்கும் ஹர்பஜன்சிங் இந்திய ஆடுகளங்களில் அணியின் அணுகுபுரையை கடுமையாக விமர்சித்துள்ளார் . இது குறித்து பேசி இருக்கும் அவர் ” சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகலங்களில் டெஸ்ட் போட்டிகளை இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெல்வதன் மூலம் இது போன்ற முக்கியமான பெரிய ஆட்டங்களுக்கு உங்களை தயார் படுத்த முடியாது அதற்கு கடினமாக முயற்சி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய அவர் ” உள்நாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆடுகளங்களை தயார் செய்து வெற்றி பெறுவதன் மூலம் அணிக்கு எந்த நல்ல விஷயமும் நடக்கப் போவதில்லை . மேலும் அது போன்ற ஆடுகளங்களில் முதல் நாளிலிருந்து பந்து திரும்பும் இதனால் வேகப்பந்துவீச்சாளர்களும் அதிக அளவு பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது . அதுபோன்ற ஆடுகளங்களில் ஆடி விட்டு வந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற மிகப்பெரிய போட்டிகளில் வெற்றி பெறலாம் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -