நீ டி20 ஆடலப்பா.. டெஸ்ட் மேட்ச்-க்கு ஒரு வரைமுறை இருக்கு அப்படி ஆடனும் – இளம் வீரரை சாடிய ஜாகிர் கான்!

0
34736

“டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதைப்போல டெஸ்ட் போட்டிகளில் ஆடக்கூடாது. டெஸ்ட் போட்டிகளுக்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது.” என்று இஷான் கிஷன் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஜாகீர் கான்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாம் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது இந்திய அணி. இதில் விராட் கோலி 29 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 57 ரன்கள், ரோகித் சர்மா 80 ரன்கள் அடித்து நல்ல துவக்கமும் அமைத்துக் கொடுத்தனர். ஜடேஜா 61 ரன்கள் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்கள் அடித்து கீழ் வரிசையில் சிறப்பான பேட்டிங் அமைத்து கொடுத்தனர்.

கடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இசான் கிஷன் 20 பந்துகளில் ஒரு ரன்கள் அடித்திருந்தபோது போட்டி டிக்ளேர் செய்யப்பட்டது. இந்த இரண்டாவது டெஸ்டில் 37 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

இரண்டாம் டெஸ்டில் இஷான் கிஷன் பேட்டிங் செய்த விதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய பிரகப்பந்து பேச்சாளர் ஜாகிர் கான். ” இஷான் கிஷன் இரண்டாவது டெஸ்டில் நன்றாக பேட்டிங் துவங்கினார். ஆனால் அவர் ஆட்டம் இழந்தவிதம் சற்றும் ஏற்க முடியாத அளவிற்கு இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்துவிட்டால் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் 20-30 பந்துகள் பிடித்துவிட்டு இப்படி தவறான ஷார்ட் விளையாடி ஆட்டம் இழப்பது ஏற்க முடியாதது.

- Advertisement -

இஷான் கிஷன் டி20 மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும். இப்படி நன்றாக துவக்கம் கிடைத்த பிறகு தவறான ஷார்ட் விளையாடுவது என்பது அவரது அடுத்தடுத்த போட்டிகளிலும் பாதிப்பை உண்டாக்கும். அந்த மனநிலையை தவிர்க்க வேண்டும். இது டி20 பாதிப்பினால் வருவது. அதை விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும்.” என்று அறிவுறுத்தினார்.