ஐபிஎல் 2024.. சிஎஸ்கேவுக்கு கேப்டன் தோனி இல்லையா?.. அவரே வெளியிட்ட பதிவால் பரபரப்பு

0
187
Dhoni

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 17 வது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் மாதம் 22 ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது.

இதற்கான தயாரிப்புகளில் தேசிய அணியில் இடம் பெறாத வீரர்கள் அனைவரும் அவரவர் ஐபிஎல் அணிகளுக்கு திரும்பி வேகமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

- Advertisement -

17ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடக்க இருக்கும் ஐபிஎல் சீசனின் முதல் போட்டியிலேயே மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி இருவரும் எதிரெதிர் அணிகளில் இருந்து மோதிக்கொள்ள இருப்பது ரசிகர்களை பெரிய அளவில் எதிர்பார்ப்பிலும் உற்சாகத்திலும் தள்ளி இருக்கிறது.

மேலும் இந்த வருட ஐபிஎல் சீசன் உடன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவாரா? என்கின்ற கேள்வியும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஆனால் இப்பொழுது வரை அதற்கான எந்த ஒரு பதிலையும் மகேந்திர சிங் தோனி வெளியிடவில்லை.

- Advertisement -

ஆனால் இன்று அத்திப்பூத்தாற்போல் அவர் சமூக வலைதளத்தில் பேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவில் ” புதிய ஐபிஎல் சீசனுக்கும், புதிய ரோலுக்கும் காத்திருக்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் பதிவில் குறிப்பிட்டு இருக்கும் புதிய ரோல் என்னவாக இருக்கும் என்பது இப்பொழுது ஐபிஎல் தொடரை விட பெரிய எதிர்பார்ப்பு மிக்க கேள்வியாக மாறிவிட்டது. முன்பு ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கீப்பராக தொடர்ந்தது போல், மீண்டும் மகேந்திர சிங் தோனி செயல்பட இருக்கிறாரா? என்கின்ற யூகம் சமூக வலைத்தளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : தமிழ்நாடு அணியின் 37 வருட கனவு.. கலைத்துப் போட்ட 3 சிஎஸ்கே வீரர்கள்.. ரஞ்சி அரை இறுதியில் தோல்வி

மேலும் அவர் இம்பாக்ட் பிளேயராக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? பேட்டிங் வரிசையில் மேலே வந்து விளையாடப் போகிறாரா? என்பது போன்ற யூகங்களும் பரவ ஆரம்பித்திருக்கிறது. ஒரு சிலர் இன்னும் மேலே போய் இந்த போட்டியிலும் பங்கேற்காமல் அணியுடன் மட்டுமே இணைந்திருக்க போகிறாரா என்கின்ற யூகத்தையும் கிளப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.