இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் சாம் கான்ஸ்டார்ஸ் தொடக்க வீரராக அறிமுகமானால், ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் 96 வருடங்களாக நிலைத்திருக்கும் ஒரு தனித்துவ சாதனையை முறியடிப்பார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அடுத்து மெல்போர்ன் மற்றும் சிட்னியில் கடைசி இரண்டு போட்டிகள் ஜனவரி 26 மற்றும் ஜனவரி 4ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இந்த கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியை நேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
மூன்று முக்கிய மாற்றங்கள்
கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணியில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. வேகப்பந்துவீச்சு ஆல் கவுண்டர் சீன் அபோட், வேகப்பந்துவீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன், 19 வயதான தொடக்க ஆட்டக்கார சாம் கான்ஸ்டாஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள்.
இதில் சாம் கான்ஸ்டாஸ் பெயர் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பிருந்தே பரிசீலனையில் இருந்து வந்தது. ஆனால் எதிர்பார்க்காத விதமாக நாதன் மெக்ஸ்வினிக்கு இடம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீண்டும் கான்ஸ்டாஸ் இடம் சென்றிருக்கிறது. இவர் பகல் இரவு டெஸ்ட் பயிற்சி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அதிரடி சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
96 வருட சாதனை
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டியில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகம் ஆவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. தொடக்க வீரரின் இடத்திற்காகவே அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவான ஒன்று. இந்த அறிமுகத்தின் மூலம் அவர் 96 வருட ஆஸ்திரேலியா பிராட்மேன் காலத்து சாதனையை முறியடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க : நான் நீக்கப்பட காரணமே இந்திய அணிதான்.. அடுத்துதான் இந்த முக்கியமான விஷயத்தை கண்டுபிடிச்சேன் – டிராவிஸ் ஹெட் பேட்டி
ஆஸ்திரேலியா அணிக்கு 1928-29 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆசஸ் டெஸ்ட் தொடரில் ஜாக்சன் என்ற வீரர் தன்னுடைய 19ஆவது வயது 148 நாட்களில் தொடக்க வீரராக அறிமுகமாகி இருந்தார். இந்த நிலையில் சாம் கான்ஸ்டாஸ் இந்தியனுக்கு எதிராக நான்காவது டெஸ்ட்டில் அறிமுகமானால், 19 வயது 85 நாட்களில் அறிமுகம் ஆவார். இதன் காரணமாக அவர் 96 வருட ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டின் தனித்துவ சாதனையை முறியடித்து, அறிமுக இளம் தொடக்க ஆட்டக்காரராக சாதனை படைப்பார்.






