ஆஸ்திரேலியா அணியின் தற்போதைய அதிரடி நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் தான் எப்படி அதிரடியான ஆட்டத்திற்கு திரும்பினேன்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இன்றைய தேதிக்கு உலக கிரிக்கெட்டில் முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாடி தனி வீரராக ஆட்டத்தை மாற்றக்கூடியவர்களில் மிகவும் முக்கியமானவராக ஆஸ்திரேலியாவின் வெள்ளை பந்து தொடக்க ஆட்டக்காரரும் டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் ஆட்டக்காரருமான டிராவிஸ் ஹெட் இருக்கிறார்.
இந்தியாவிற்கு சிம்ம சொப்பனம்
தற்பொழுது இந்திய அணிக்கு உலக கிரிக்கெட்டில் பெரிய அச்சுறுத்தலை தரக்கூடிய ஒரே வீரராக ஹெட் மட்டுமே இருந்து வருகிறார். இரண்டு உலகக் கோப்பைகளை அவர் இந்தியாவின் கைகளில் இருந்து தனி வீரராக பறித்து விட்டார் என்றும் கூறலாம். தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் அவரே அச்சுறுத்தலாக இருக்கிறார்.
இப்படி எல்லாம் இருந்த போதிலும் கூட 2020-21 இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று டெஸ்ட் தொடரை வென்ற பொழுது, ஹெட் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக அவர் உடனடியாக நீக்கப்பட்டு சிட்னி டெஸ்டுக்கு புகொவ்சி சேர்க்கப்பட்டார். அங்கிருந்தே அவர் அதிரடியான ஆட்ட முறைக்கு திரும்பி இருக்கிறார்.
இந்த புள்ளியில்தான் முடிவு செய்தேன்
இது குறித்து ஹெட் கூறும் பொழுது “நான் ஆஸ்திரேலியா அணியின் காண்ட்ராக்டை இழந்தேன். பின்னர் நான் கிளப் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து சசக்ஸ் சென்றேன். அங்கேயும் நான் வழக்கமாக பேட்டிங் செய்யும் முறையில் பேட்டிங் செய்து திணறினேன். இதற்குப் பிறகு அங்கு கடைசி ஆட்டத்தில் 49 பந்தில் 46 ரன்கள் எடுத்தேன். அந்த இன்னிங்ஸ் நான் நன்றாக விளையாடியதாக உணர்ந்தேன்”
இதையும் படிங்க : பும்ராதான் கேப்டனா வரணும்.. ஆனா அவருக்கு இந்த ஒரு விஷயம் மட்டுமே பிரச்சனையா இருக்கும் – ஆலன் பார்டர் கருத்து
“அப்போதெல்லாம் நான் என் பேட்டிங் டெக்னிக் பற்றி அதிகம் கவலைப்பட்டேன். நான் அவுட் ஆகாமல் இருப்பது குறித்தும் அதிகம் கவலைப்பட்டேன். நான் ஆட்டம் இழக்காமல் அதிக நேரம் களத்தில் நின்றால் என்னால் பெரிய ரன்கள் எடுக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் இப்பொழுது நான் அவுட் ஆவதை பற்றி கவலைப்படுவது கிடையாது. தொடர்ந்து ஸ்கோர் செய்வதைப் பற்றி மட்டுமே நான் நினைக்கிறேன். என் நோக்கம் முழுவதும் ஸ்கோர் செய்வதை பற்றி மட்டுமே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.