35/5.. இலங்கை சொந்த மண்ணில் படுதோல்வி.. தடுமாறிய இங்கிலாந்து எழுந்து மெகா வெற்றி.. ரசிகர்கள் சோகம்

0
136
Srilanka

இன்று டி20 உலக கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை வருவதற்கான வாய்ப்புகள் இருந்ததால் இலங்கை அணிக்கு டாஸ் சாதகமான விஷயமாக அமைந்தது.

- Advertisement -

இங்கிலாந்து திணறல்

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் 7, ஜேக்கப் பெத்தேல் 3, டாம் பாண்டன் 6, ஹாரி புரூக் 14, சாம் கரன் 11, வில் ஜேக்ஸ் 21, ஜெமி ஓவர்டன் 10* ரன்கள் எடுத்தார்கள்.

இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பின் சால்ட் 40 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 62 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. வெல்லாலகே மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

சுருண்ட இலங்கை

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக காத்திருந்தது. அந்த அணி பவர் பிளேவில் மட்டுமே 35 ரன்கள் மட்டும் எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்து சிக்கிக்கொண்டது. கடைசிவரையில் இந்த சரிவில் இருந்து அந்த அணியால் மீண்டும் வெளியே வர முடியவில்லை.

இதையும் படிங்க : இப்ப இந்திய டி20 அணிக்கு விராட் கோலி திலக் கிடையாது.. இவர்தான் அந்த ரோலை எடுத்து இருக்கார் – இர்பான் பதான் கருத்து

இறுதியில் இலங்கை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு கேப்டன் சனகா மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 24 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் வில் ஜேக்ஸ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -