பாகிஸ்தான் அணிக்கு எதிரா புரமோசன் தரோம்னு எங்க கோச் சொன்னார்.. அதனாலதான் நான் அப்படி செஞ்சேன் – இங்கி கேப்டன் பேட்டி

0
186

நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய கேப்டன் ஹாரி ப்ரூக் வெற்றி பெற்றது குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஃபர்கான் அதிகபட்சமாக 63 ரன்கள் விலாசினார். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் தான் சதித்த முதல் பந்திலையே அவுட் ஆகி வெளியேறினார்.

அதற்குப் பின்னர் ஆச்சரியம் அளிக்கும் விதமாக கேப்டன் ஹாரி மூன்றாவது வரிசையில் களமிறங்கினார். தப்பாக விளையாடிய அவர் 51 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 100 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டதோடு அரை இறுதிக்கு முன்னேறவும் முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

போட்டி முடிந்த பின்பு அவர் பேசும் போது “வழக்கமாக ஐந்தாம் வரிசையில் பேட்டிங் களமிறங்கும் நான் இன்று மூன்றாவது வரிசையில் களம் இறங்கி இதற்கு முக்கிய காரணம் எங்களுடைய கோச் பிரண்டன் மெக்கல்லம் தான். அவர்தான் போட்டி நடைபெறும் இப்போது காலையில் இதைச் சொன்னார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உங்களுக்கு பிரமோஷன் கொடுக்கலாம் என்று நினைக்கிறோம் என்று கூறினார்.

எனக்கும் அவருடைய யோசனை சரியாகவே இருந்தது. அதனால்தான் நானும் மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாட முடிவு செய்தேன். அது எங்களுக்கு நல்ல பலனை கொடுத்தது. மேலும் எங்களது பௌலிங்கில் ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசினார். அவர் இதுவரை பவர் பிளவில் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -