நடைபெற இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மூன்று மெகா சாதனைகளை படைப்பதற்கான அருமையான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் மழையின் காரணமாக துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த மொத்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மூன்று சிறப்பு சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்பில் இருக்கிறார்.
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒட்டுமொத்தமாக 752 ரன்கள் எடுத்திருக்கிறார். அவர் இன்னும் 258 ரன்கள் எடுக்கும் பொழுது இந்த உலகத்திற்கு சாம்பியன்ஷிப் சுழற்சியில் ஆயிரம் ரன்களை எட்டுவார்.
மேலும் 2019 – 21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ரோகித் சர்மா ஆயிரம் ரன்களை கடந்திருந்தார். தற்பொழுது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 258 ரன்கள் எடுத்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இரண்டு முறை ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையைப் படைப்பார்.
தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 87 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். அவர் இன்னும் 13 சித்தர்கள் அடிக்கும் பொழுது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 100 சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். மேலும் பென் ஸ்டோக்ஸ், பிரண்டன் மெக்கலம் மற்றும் கெயில் ஆகியோர் இருக்கும் பட்டியலில் இணைவார்.
இதையும் படிங்க : இது புது மாதிரியான விராட் கோலி.. ஆஸி அவர்கிட்ட வசமா சிக்க போறாங்க – ஆர்சிபி முன்னாள் கோச் பேட்டி
இதோடு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கேப்டனாக முழுமையாக மூன்று போட்டிகளையும் வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய கேப்டன் என்று விராட் கோலி இடம் இருக்கும் சாதனையையும் முறியடிப்பார். விராட் கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 14 டெஸ்ட் வெற்றிகள் பெற்றிருக்கிறார். ரோகித் சர்மா தற்பொழுது 12 டெஸ்ட் வெற்றிகள் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.