ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன் விராட் கோலியின் மனநிலை தற்பொழுது வேறு மாதிரியாக இருப்பதாகவும் அது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சவாலை உருவாக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலியை நம்பி மட்டுமே இல்லாமல் இந்திய அணி உருவாகி இருக்கிறது. அதே சமயத்தில் பழைய விராட் கோலி மீண்டும் வெளியே வருவார் என்றால், இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆஸ்திரேலியாவில் மீண்டும் விராட் கோலி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
விராட் கோலி விரும்புவது நம்பர்களை இல்லை
இதுகுறித்து ஆர்சிபி முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன் கூறும் பொழுது “விராட் கோலி தன்னுடைய எண்களைப் பற்றி கவலைப்படாமல் அணி வெற்றி பெறுவதை விரும்பக்கூடிய கட்டத்தில் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். மேலும் மற்ற அணிகளுக்கு இது மிகவும் ஆபத்தான விஷயம். ஏனென்றால் அவர் தன்னுடைய ரன் பற்றி கவலைப்படாமல் இருந்தால் அவருக்கு பெரிய ரன்கள் கிடைக்கும்”
“ஆஸ்திரேலியாவில் ஒரே டெம்போவை மெயின்டன் செய்யும் திறன் முக்கியமானது. கேப் கண்டுபிடித்து ஒன்று இரண்டு என ரன்கள் எடுப்பது, ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்குதலாக மாற்றும் பொழுது எதிர் தாக்குதல் செய்வது என்று விராட் கோலி செல்லக்கூடிய திறமை பற்றியது. இப்படி நடக்கும் பொழுது விராட் கோலி மிகச் சிறப்பாக இருப்பார்”
இளம் வீரர்களுக்கு விராட் கோலி தேவை
“பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி பெரிய ரன்களை எடுக்காவிட்டாலும் கூட அவர் நல்ல டச்சில் இருப்பது தெரிந்தது. அவர் சரியான பொசிஷனுக்கு வந்து விளையாடினார். நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடுவது விராட் கோலிக்கு இன்னும் பொருத்தமானதாக அமையும்”
இதையும் படிங்க : ஆஸி டெஸ்ட் தொடர்.. தம்பி ஜெய்ஸ்வால் இதை மட்டும் நீ அங்க மாத்திக்காத.. கலக்கலாம் – அனில் கும்ப்ளே அறிவுரை
“அவருக்கு நல்ல ஆட்டம் இருக்கிறது அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவில் கண்டிஷன் அவருக்கு மிக நன்றாகவே தெரியும். அவர் தன் அணியின் இளம் வீரர்களுடன் நடத்தும் கலந்துரையாடல்கள், ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடும் வகையில் இளம்வீரர்கள் செயல்படுவதற்கு மிகவும் உதவியானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






