விராட் கோலி, ரோகித் சர்மா இருந்தால் என்ன? இது ஆஸ்திரேலியாவிற்கு நிகரான இந்திய அணி கிடையாது; முக்கியமான ஒருவர் இல்லை – ரவி சாஸ்திரி பேட்டி!

0
598

“முகமது சிராஜ் மற்றும் முகமது சமி இருவருடன் இந்த ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாலுக்கு நிகரான இந்திய அணி இது என்று கூறியிருப்பேன். தற்போது அது இல்லை.” என்று பேசியுள்ளார் ரவி சாஸ்திரி.

தற்போது இங்கிலாந்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்கு இத்தகைய தீவிர பயிற்சி நடந்து வருகிறது.

- Advertisement -

இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறியுள்ளது. கடந்த முறை சென்ற போது நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் பெற்றது. இம்முறை அப்படி ஒரு தவறும் நிகழ்ந்திடாமல் இருக்க பல்வேறு திட்டங்கள் வகுத்து பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த இந்திய அணி இங்கிலாந்தில் பெரிதளவில் ரெக்கார்டு வைத்திருக்கவில்லை. ஆகையால் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பலரும் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதற்கு சாதகமான வகையில் பேட்டி அளித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

முதலாவதாக டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசிய அவர், “கிரிக்கெட்டுகளுக்கு எல்லாம் தலையாய ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட் தான். தற்போது பல்வேறு விதமான கிரிக்கெட் போட்டிகள் வந்து விட்டாலும் இன்னும் டெஸ்ட் மீது ஆர்வம் விறுவிறுப்பு இருக்க காரணம். அதுதான் ஒவ்வொரு வீரரின் உண்மையான மனவலிமை, டெக்னிக், பொறுமை என அனைத்தையும் சோதிக்கும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு ஐசிசி எடுத்துவரும் முன்னேற்பாடுகளுக்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கிறோம்.” என்றார்.

- Advertisement -

அதன் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, “தற்போது இந்திய அணி பேட்டிங்கில் பேலன்ஸ் கொண்டிருக்கிறது. ஆனால் பந்துவீச்சில் இன்னும் ஆஸ்திரேலியா அணிக்கு நிகரானது இல்லை என்று கூறுவேன். இந்த இந்திய அணியில் பும்ரா இருந்திருந்தால், நிச்சயம் முகமது சிராஜ் மற்றும் முகமது சமி இருவருடன் சேர்ந்து பும்ரா செயல்படுகையில் ஆஸ்திரேலியாவிற்கு நிகரான பலம்மிக்க பந்துவீச்சு அணியாக ஒப்பிடலாம். தற்போது அது இல்லை என்று உணருகிறேன்.

இருப்பினும் ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி விளையாடிய அனுபவம் கொண்டது. எந்த இடத்தில் சுதாரித்து செயல்பட வேண்டும் என்பதை உணர்வார்கள். ரோகித் சர்மா நன்றாகவே வழிநடத்துகிறார். இதில் வெற்றி பெற்றுக் கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என பேசினார்.