கில்லுக்கு பதிலா ஸ்மித் இருந்தா அவுட் கொடுத்திருப்பீங்களாடா? 3ஆம் நடுவரின் சர்ச்சை முடிவுக்கு – கமெண்டரியில் ஓப்பனாக சாடிய ரவி சாஸ்திரி!

0
9734

சுப்மன் கில் அடித்து கிரீன் பிடித்த பந்து தரையில் பட்டது என தெரிந்தும், அலட்சியமாக அவுட் என்று அறிவித்த 3ஆம் நடுவரின் முடிவை கமெண்டரியில் இருந்துகொண்டு கடுமையாக விமர்சித்துள்ளார் ரவி சாஸ்திரி.

இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல் இன்னிங்சில்173 ரன்கள் முன்னிலையுடன் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் 123 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

நான்காம் நாளின் ஆரம்பத்திலேயே லபுஜானே 41 ரன்களுக்கு உமேஷ் யாதவிடம் அவுட் ஆனார். பின்னர் ஜடேஜா பந்தில் கேமரூன் கிரீன் 25 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்ததாக மிச்சல் ஸ்டார்க் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றனர்.

400 ரன்கள் முன்னிலையை ஆஸி., அணி கடந்தபின், ஸ்டார்க் விக்கெட்டை தூக்கினார் ஷமி. களத்தில் 66 ரன்களுடன் அலெக்ஸ் கேரி நிற்க, கம்மின்ஸ் அவுட்டானபின் ஆஸி., அணி டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்சில்8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்து, 443 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

444 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கில்-ரோகித் சர்மா இருவரும் முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தபோது, சர்ச்சையான முறையில் கில்லுக்கு 3ஆம் நடுவர் அவுட் கொடுத்தார். ரீ-பிளேவில் அவுட் இல்லை, பந்து தரையில் பட்டது என்று தெளிவாக தெரிந்தது. இருப்பினும் 3ஆம் நடுவர் இப்படி கொடுத்தது பேரதிர்ச்சியை கொடுத்தது.

- Advertisement -

அப்போது கமெண்டரியில் இருந்த முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “3ஆம் நடுவர் முழித்துக்கொண்டு தான் இந்த முடிவை கொடுத்தாரா? இதே அந்த இடத்தில் ஷுப்மன் கில்லுக்கு பதில் ஸ்டீவ் ஸ்மித் இருந்திருந்தால் முடிவு மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும்.” என்று கடுமையாக சாடினார்.

அருகில் அமர்ந்திருந்த ஆஸி., அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “இந்த முடிவு அதிர்ச்சியாக இருக்கிறது. 3ஆம் நடுவருக்கு பிரஷர் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் தான் களத்தில் கொடுக்கப்பட்ட முடிவையே கொடுத்துவிட்டரா? இது அவுட்டே இல்லையே.” என்று பேசினார்.