“ஹர்திக் பாண்டியா திரும்ப மும்பை இந்தியன்ஸ்க்கு போனால்.. அது..!” – அஸ்வின் ஆச்சரியமான பேட்டி!

0
15237
Ashwin

அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் பரிமாற்றத்திற்கான வேலைகள் மிகவும் மும்முரமாக ஐபிஎல் அணிகளுக்கு இடையே தற்பொழுது நடந்து வருகிறது. மேலும் இதற்கான கடைசி நாள் நாளை மட்டுமே.

இந்த நிலையில் லக்னோ அணி ஆவேஸ் கானை ராஜஸ்தானுக்கு கொடுத்து அதற்கு பதிலாக பேட்மேன் தேவ்தத் படிக்கலை வாங்கி இருக்கிறது. இது அதிகப்படியாக ராஜஸ்தானுக்கு சாதகமாக இருப்பதாக அமைகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்கள் அணியின் இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சாபாஷ் அகமதை ஹைதராபாத்துக்கு கொடுத்து, அங்கிருந்து இடது கை சுழற் பந்துவீச்சாளர் மயங்க் தகாரை வாங்கி இருக்கிறது.

இதுவெல்லாம் வெகு சாதாரணமாக ஐபிஎல் உலகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்க, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப வருகிறார் என்கின்ற செய்திதான் பெரிய செய்தியாக இருக்கிறது.

இதுகுறித்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் பலவற்றில் இருந்து இந்த செய்தி வந்து கொண்டே இருக்கிறது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி யாரையும் குஜராத் அணிக்கு கொடுக்காமல், 15 கோடி ரூபாய் பணம் மட்டும் கொடுத்து ஹர்திக் பாண்டியாவை வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் வீரரும் மற்றும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும்பொழுது “ஹர்திக் பாண்டியா மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போவதாக இருந்தால் அது தங்கம் மாதிரியானது. இது முழுக்க பணம் கொடுத்து அவரை வாங்குவதாகவே இருக்கும்.

ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதுவரை எந்த வீரரையும் கொடுத்து இன்னொரு வீரரை வாங்கியது கிடையாது. அப்படி நடந்ததாக நினைவில்லை. மும்பை வளர்த்த வீரரான ஹர்திக் அங்கு திரும்பி சென்றால், அவர்களுடைய பிளேயிங் லெவன் வேறு மாதிரி இருக்கும்.

குஜராத் அணிக்கு முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியா அணியை விட்டு நகர்ந்தால், பெரிய மாற்றங்களை அந்த அணி நிர்வாகம் செய்ய வேண்டியதாக இருக்கும். தற்பொழுது ஹர்திக் பாண்டியா 15 கோடி வீரர் என்கின்ற காரணத்தினால், அதற்கான பணத்தை உருவாக்க மும்பை இந்தியன்ஸ் சில வீரர்களை விடுவிக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!