“2 பேருக்கும் இன்னும் வாய்ப்பு கிடைக்குமா?.. என்ன நடக்குது?” – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
76
Gill

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருக்கிறது.

நேற்று துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் ஆட்டம் இழக்காமல் 179 ரன்கள் எடுத்திருக்கிறார். இவருடன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் 35 ரன்னை தொடவில்லை. ஒருபுறம் மற்றவர்கள் எல்லோரும் பேட்டிங்கில் சரிவை உண்டாக்க, ஜெயஸ்வால் மட்டுமே இவ்வளவு தூரம் அணியை கொண்டு வந்திருக்கிறார்.

கடந்த பத்து இன்னிங்ஸ் மேலாக ஏமாற்றத்தை கொடுத்து வரும் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே தங்களுக்கு கிடைத்த துவக்கத்தை வீணடித்து வெளியேறினார்கள்.

இவர்கள் இருவரது இடத்தின் மீதும் பெரிய நெருக்கடி இருக்கிறது. இவர்கள் எஞ்சி இருக்கும் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் ஏதாவது செய்யவில்லை என்றால், இருவரில் ஒருவராவது நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஸ்ரேயாஸ் மற்றும் கில்லுக்கு நேரம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இன்னும் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே இருக்கிறது. அவர்கள் ரன்களை அடிப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் அவர்கள் அடுத்த முறை ரன் அடிக்கவில்லை என்றால், இருவருக்கும் பிரச்சனைகள் உருவாகிவிடும்.

கில் துவக்கத்தில் அதிரடியாக விளையாடினார். அடுத்து ஆண்டர்சன் ஓவரில் மூன்று எட்ஜ்கள் வாங்கினார். மூன்றாவது முறை கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். அவர் தொடக்கத்தை வீணடித்து இருக்கிறார். 34 ரன்கள் போதுமானது கிடையாது.

ஸ்ரேயாஸ் ஐயரும் ஏமாற்றம் அளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் கிரீசில் அப்படி சென்று யாரும் விளையாடுவதில்லை.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வால் இதில்  பிராட்மனுக்கு மேல இருக்கார்.. அவர் ஸ்டார்” – இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

ஷார்ட் பந்துகளில் அதிகம் வேகம் இல்லை என்றாலும் கூட அவர் கிரீசில் நகர்ந்து விளையாட பார்த்தார். இது அவருக்கு நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது. அவர் ஆட்டம் இழந்த பந்து துரதிஷ்டவசமானது என்று நீங்கள் கூறலாம். ஆனால் கிரீசில் நிலையாக இல்லை” என்று கூறி இருக்கிறார்.