“ஜெய்ஸ்வால் இதில்  பிராட்மனுக்கு மேல இருக்கார்.. அவர் ஸ்டார்” – இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

0
567
Jaiswal

இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்திருக்கிறது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து ரன்கள் உடனும், துவக்க வீரராக வந்து முதல் பந்தை சந்தித்து விளையாடிய ஜெய்ஸ்வால் 179 ரன்கள் உடனும் களத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

நாளை தொடர்ந்து நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் தனது முதல் சர்வதேச டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்வார் என ரசிகர்கள் பெரிய ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

இன்று ஜெய்ஸ்வால் தனிநபராக 179 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கும் நிலையில், இவருக்கு அடுத்தபடியாக கில் எடுத்த 34 ரன்களே இரண்டாவது அதிகபட்சமாக இருக்கிறது. அந்த அளவிற்கு ஆட்டம் இழந்த ஆறு இந்திய பேட்ஸ்மேன்களும் மோசமாக விளையாடி இருக்கிறார்கள்.

ஜெய்ஸ்வால் ஆட்டம் குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் இருந்து அருமையான ஆட்டம் வந்தது. இளம் வீரரான அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். இங்கிலாந்து அணியில் ஜிம்மி ஆண்டர்சன் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக இருந்தார். ஜெய்ஸ்வால் அவரது பந்துவீச்சுக்கு நல்ல மரியாதை கொடுத்து விளையாடினார்.

- Advertisement -

இதன்பிறகு ஸ்பின் வந்ததும் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்தார். பிறகு சிறந்த வீரர் என்பதை காட்டினார். முதல் 14 முறை 50 ரன்கள் தாண்டி அடித்துள்ள அவர், அதை 10 முறை சதங்களாக மாற்றியிருக்கிறார். அரை சதத்தை சதங்களாக மாற்றுவதில் இந்த இடத்தில் டான் பிராட்மனை விட மேலே இருக்கிறார்.

ஜெய்ஸ்வால் தனக்கு இருக்கும் பெயருக்கு ஏற்றபடி செயல்படுகிறார். அவர் ஏன் ஒரு நட்சத்திர வீரர் எனக் காட்டுகிறார். அவர் 179 ரன்கள் எடுத்த தனியாக நிற்க, மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் தனியாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “158-6.. தம்பி உன் வயசுக்கு மீறின பேட்டிங் பண்ணிட்ட” – குக் ஜெயஸ்வாலுக்கு பாராட்டு

இந்தியாவில் ஸ்பின் எப்படி விளையாட வேண்டும் என்று அவர் காட்டினார. இது ஒரு மோசமான பிட்ச் கிடையாது. பெரிய அளவில் பந்து ஸ்பின் ஆகவில்லை. முதல் நாள் முழுவதும் அவர் சிறப்பாக பந்துகளை அடக்கி விளையாடினார். பிறகு கடுமையாக அடித்தும் விளையாடினார். பந்தை காற்றில் அடிப்பதற்கு அவருக்கு எந்தவித தயக்கமும் இல்லை. அவர் சிக்ஸர் மூலம் தனது சதத்தையும் எட்டினார்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.