“சாதாரண பேட்ஸ்மேன் ரன் அடிச்சா சூப்பர் ஸ்டார்னு சொல்றிங்க!” – பாபர் அசாமுக்கு ஆதரவாக வந்த கபில்தேவ்!

0
2193
Kapil

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை துவங்குவதற்கு முன்பாக ஆசியக் கோப்பை தொடருக்கு முன்வாரத்தில் பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட்டின் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது.

உலகக் கோப்பைக்கு முன்பாக நடந்து முடிந்த ஆசிய கோப்பைத் தொடர் பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சரிவை உண்டாக்கிய தொடராக அமைந்தது.

- Advertisement -

அந்தத் தொடரில் அந்த அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பேட்ஸ்மேன்களின் மந்தமான ரன் அடிக்கும் திறமை, மேலும் சுழற் பந்துவீச்சில் இருந்த ஓட்டை என எல்லாம் வெளியே வந்தது.

இதைவிட முக்கியமாக அந்த அணியின் திறமையான இளம் வேகபந்துவீச்சாளர் நசிம் ஷா தோள்பட்டை காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்தும் உலகக்கோப்பை தொடரில் இருந்தும் பெரிய பாதிப்பை உண்டாக்கியது.

இதற்கு அடுத்து உலகக்கோப்பை வந்த பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் எப்படி செயல்பட்டதோ அப்படியே உலகக்கோப்பையிலும் செயல்பட்டது. தற்பொழுது அரையிறுதிக்கு மூன்றாவது முறையாக தொடர்ந்து முன்னேறாமல் வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என பலரின் பதவிகள் பறிக்கப்பட இருக்கிறது. மிகக் குறிப்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பதவி பறிக்கப்பட அதிகபட்ச வாய்ப்புகள் இருக்க செய்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து 1993 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் கபில் தேவ் தன்னுடைய அனுபவத்திலிருந்து பாபர் அசாமுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இன்று நீங்கள் பாபர் கேப்டன் பதவிக்கு சரியானவர் இல்லை என்று கூறினால், நீங்கள் அவரின் தற்போதைய ஆட்டத்தைதான் பார்க்கிறீர்கள். இதே கேப்டன் தான் பாகிஸ்தான் அணியை சில மாதங்களுக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்திற்கும் கொண்டு வந்தார்.

ஒரு வீரர் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்து விட்டால் அவரை அடுத்த அணியில் எடுக்கக் கூடாது என்று 99 சதவீதம் பேர் விரும்புகிறீர்கள். ஒரு சாதாரண வீரர் வந்து திடீரென ரன் அடித்தால் அவரை சூப்பர் ஸ்டார் என்கிறீர்கள்.

ஆனால் எப்பொழுதுமே ஒருவரின் தற்போதைய ஆட்டத்தை மட்டுமே பார்க்காதீர்கள். அவர் இதற்கு முன் எப்படி விளையாடினார்? அவருக்கு விளையாட்டின் மீது எப்படியான ஆர்வமும் திறமையும் இருக்கிறது என்று பாருங்கள்!” என்று கூறி இருக்கிறார்!