வீடியோ.. 9 ஆண்டுக்கு பின் விக்கெட் எடுத்த விராட் கோலி.. குஷியில் கொண்டாடிய அனுஷ்கா.. திருவிழா போல் மாறிய மைதானம்

0
6713

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ரோகித் சர்மா இன்று செவி சாய்த்தார். அதாவது ஹர்திக் பாண்டியா காயத்தால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இந்திய அணியின் ஆறாவது பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

அப்போது ரசிகர்கள் பலரும் விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டனர். ஏற்கனவே மும்பையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கூட விராட் கோலிக்கு பவுலிங் கொடுங்கள் என ரசிகர்கள் கத்த தொடங்கினர்.

- Advertisement -

இது குறித்து பேசிய ராகுல் டிராவிட் விராட் கோலி இன்னிங்ஸ் பாராட்டி அவரை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 410 ரன்கள் குவித்து இருந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்து அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட் மேட்ச் போல் விளையாடி விக்கெட் விழாமல் களத்தில் நின்று கொண்டிருந்தனர். இதனால் கடுப்பான ரோகித் சர்மா திடீரென்று விராட் கோலிக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில் விராட் கோலி நெதர்லாந்து அணியின் கேப்டனான ஸ்காட் எட்வர்ட்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.

இதனை அடுத்து மைதானமே திருவிழா போல் மாறியது. நடந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. விராட் கோலியின் மனைவி உற்சாக வெள்ளத்தில் இருந்தார். இதனை அடுத்து விராட் கோலியை அனைத்து வீரர்களும் கட்டி அணைத்து கொண்டாடினர். விராட் கோலி இதுவரை நான்கு விக்கெட்டுகளை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். விராட் கோலி இது போல் இரண்டு ஓவர் வீசினால் அது நிச்சயம் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமான விஷயமாக அமையும்.பேட்டிங், பந்துச்சு, பில்டிங் என தற்போது மூன்றிலுமே விராட் கோலி கவனம் செலுத்தி வருவதால் கிரிக்கெட்டின் உண்மையான கிங் அவர்தான் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.