முதல் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான், ஆப்கான்.. வெறுங்கையோடு போகாமல் பார்த்து கொண்ட ஐசிசி.. பரிசுத்தொகை எவ்வளவு?

0
1705

2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இம்முறை பரிசுத் தொகையை அதிகப்படுத்தி ஐசிசி வழங்கி இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்தும் நம்பர் ஒன் அணியாக இருந்து உலக கோப்பையில் விளையாட வந்த பாகிஸ்தானும் அரை இறுதிக்கு வருவார்கள் என்று பல கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கணிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் இரு அணிகளும் செயல்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் வெறும் மூன்று போட்டியில் மட்டுமே வென்று மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

- Advertisement -

இது போன்று பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் வென்று அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி மற்றும் இங்கிலாந்து அணி வெறுங்கையோடு செல்லாமல் இவர்களுக்கு என பரிசு தொகையை ஐசிசி அறிவித்திருக்கிறது.

அதன்படி இந்த தொடரில் விளையாடிய அனைத்து அணிகளும் லீக் சுற்றில் பெரும் ஒவ்வொரு வெற்றிக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் 33 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் லீக் சுற்று வரை தகுதி பெற்று முதல் சுற்றோடு வெளியேறும் அணிக்கு தலா 70 லட்சம் ரூபாய் இந்திய ரூபாய் மதிப்பில் வழங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான அணி 2 கோடியே 16 லட்சம் ரூபாய் பரிசு தொகையை பெற்று நாடு திரும்ப உள்ளது. இதை போன்று இங்கிலாந்த அணி ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பரிசு தொகையை பெற்று நாடு திரும்புகிறது.

- Advertisement -

உலகின் மிகவும் ஏழை கிரிக்கெட் வாரியம் ஆக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானும் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் பரிசு தொகையை பெற்றிருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் சிறந்த விளங்கிய அணியாக ஆப்கானிஸ்தான் உள்ளது.

எனினும் அந்த அணி நூலிலையில் அரை இறுதி வாய்ப்பை விட்டது இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளின் படுதோல்வி காரணமாக அவர்களுடைய அணியில் பல மாற்றம் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.