“இந்தியாவுக்கு மட்டும் ஐசிசி ஸ்பெஷல் பந்தை தருது.. பிசிசிஐயே காரணம்!” – பாக் முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு!

0
3060
ICC

நேற்று இந்திய அணி மீண்டும் ஒருமுறை இலங்கை அணியை மிகக் குறைவான ரன்களுக்கு சுருட்டி அசத்தியிருக்கிறது. ஆசிய கோப்பையில் 50 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, நேற்று 55 ரன்களில் சுருட்டியது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடு மிகவும் உலகத்தரத்தில் அமைந்திருக்கிறது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களே இந்திய பவுலிங் யூனிட்டை எதிர்த்து விளையாடுவது கடினமானது என்று ஸ்ரேயாஸ் ஐயரே கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் முகமது சமி இந்திய பவுலிங் யூனிட்டில் கடந்த மூன்று போட்டிகளில் வந்து இணைந்த பிறகு, இந்திய பவுலிங் யூனிட்டின் தரம் என்பது வேறொரு உயரத்திற்கு சென்று விட்டது என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் முதல் 15 ஓவர்களுக்கு இவர்கள்தான் இருக்கிறார்கள். புதிய பந்தில் 15 ஓவர்களை உலகத் தரமான மூன்று பந்துவீச்சாளர்களிடம் எதிர்கொண்டு விளையாடுவது என்பது அவ்வளவு சாதாரணமான காரியம் கிடையாது.

இதன் காரணமாக இந்திய வேகப்பந்து பேச்சாளர்கள் முதல் 15 ஓவரிலேயே இந்திய அணிக்கு தேவையான அடித்தளத்தை பந்துவீச்சில் உருவாக்கி விடுகிறார்கள். மேற்கொண்டு வரக்கூடிய ஸ்பின்னர்கள் மீதி வேலையை பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய பந்துவீச்சும் உலகத் தரத்தில்தான் அமைந்திருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டை விட பவுலிங் யூனிட் தான் இந்திய அணியின் வெற்றிகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹஸன் ராஸா இந்திய அணிக்கு மட்டும் சிறப்பான பந்துகள் பிசிசிஐ வற்புறுத்தி ஐசிசி கொடுக்கிறது என்று கூறி ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” சமி மற்றும் சிராஜ் தென் ஆப்பிரிக்காவில் ஆலன் டொனால்ட் மற்றும் மகாயா நிடினி இருவரையும் பயன்படுத்தியது போல இருக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் இந்த மாதிரியான அணிக்கு எதிராக எப்படி விளையாடுவார்கள் என்பது குறித்து எங்களுக்கு புரியவில்லை.

அவர்களுடைய பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் சீம் இரண்டும் இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் பளபளப்பு கூடுதலாக இருந்தது. மேலும் இரண்டாவது இந்திய அணி பந்து வீசும் பொழுது பந்தில் ஏதோ மாற்றம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பிசிசிஐ ஐசிசிக்கு நெருக்கடி கொடுத்து, மூன்றாவது நடுவர்கள் மூலமாக தமக்கு சாதகமான பந்துகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எனவே இது குறித்து ஆரம்பத்தில் இருந்து ஆராய்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும்!” என்று பரபரப்பாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்!