“ஐசிசி இந்தியாவை செமி பைனல் விளையாட விட்டிருக்கக் கூடாது..!” – இங்கிலாந்து முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

0
7192
ICC

நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதி போட்டிக்கு முன்நாளில் ஆடுகளம் மாற்றப்பட்டது பெரிய சர்ச்சையாக தற்பொழுது மாறி வருகிறது.

இதற்கு ஐசிசி தரப்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய ஆடுகளத்தை பயன்படுத்த வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. அதே சமயத்தில் பயன்படுத்தப்பட இருந்த ஆடுகளத்தில் பிரச்சனை இருந்த காரணத்தினாலே, ஆடுகளம் ஐசிசி அதிகாரியின் மேற்பார்வையுடன் மாற்றப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஐசிசி தெளிவான விளக்கம் அளித்த பின்னும் கூட வெளியிலிருந்து இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் மீது பெரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் ஒரு படி மேலே போய் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் போடுவதற்கு நாணயத்தை ஏமாற்றுவதற்காக வேண்டுமென்றே தூரமாக தூக்கி எறிகிறார் என்பதெல்லாம் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஒருவரால் பேசப்படுகிறது.

இந்த நிலையில் ஆடுகளம் மாற்றப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். அவர் ஐசிசி மீதும் குற்றச்சாட்டை சேர்த்து வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவுடையது கிடையாது. அது அவர்களின் நாட்டில் நடக்கிறது அவ்வளவுதான். இது ஐசிசி நிகழ்வு இந்தியாவின் நிகழ்வு கிடையாது.

ஐசிசி இயக்குனர் ஆண்டி அட்கின்சன் முக்கியமான போட்டிகளுக்கான ஆடுகளத்தை தீர்மானிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியமோ அல்லது வேறு எந்த நாடுகளோ இதை தீர்மானிக்க முடியாது.

புதன்கிழமை நடந்த அரை இறுதியில் இந்தியாவை ஆடுகளத்தை தேர்வு செய்ய விட்டதின் மூலம், ஐசிசி தன்னுடைய பலவீனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இது அனைவருக்கும் ஆச்சரியம் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஆடுகளத்தை மாற்ற வேண்டும் என்கின்ற இந்தியாவின் கோரிக்கையை ஐசிசி மறுத்து இருக்க வேண்டும். அவர்கள் விளையாட முடியாது என்று கூறினால் அவர்களை அரை இறுதியில் இருந்து வெளியேற்றி இருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!