உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடாததால் ஐசிசிக்கு மிகப்பெரிய தொகை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிரிக்கெட் உலகின் ஆதிக்க சக்தி
கிரிக்கெட் உலகின் ஆதிக்க சக்தியாக திகழும் இந்திய அணிக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்திய ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி இந்தியாவில் விளையாடுவதை தாண்டி உலகின் எந்த மூலையில் விளையாடினாலும் அங்கு இந்திய அணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பது கண்கூடாக காணலாம்.
இந்த சூழ்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி இந்த முறை தகுதி பெறத் தவறியது. சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்த சூழ்நிலையில் வருகிற ஜூன் மாதம் நடைபெற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாட உள்ளன.
மிகப்பெரிய வருவாய் இழப்பு
இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை தகுதி பெற்று விளையாடியது. முதல் முறை நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், இரண்டாவது முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் விளையாடி தோல்வியை தழுவியது. இந்த சூழ்நிலையில் தற்போதைய இறுதிப் போட்டிக்கு தகுதி பெற தவறியதால் போட்டி நடைபெறும் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வருவாய் இழப்பு 4 மில்லியன் பவுன்ட்ஸ் வரை இருக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பைனல்ஸ்ல அவர் அப்படி செஞ்சிருக்க கூடாது.. இன்னும் பொறுப்பா ஆடி இருக்கணும் – இந்திய முன்னாள் வீரர்
அதாவது இந்திய மதிப்பில் சுமார் 45 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள அறிக்கையின்படி “இந்தியா இறுதிப் போட்டியில் விளையாடாமல் போனது மெல்போன் கிரிக்கெட் கிளப் எதிர்பார்க்கும் நிதி வீழ்ச்சியை கணிசமாக குறைத்துள்ளது. இது உலகளாவிய விளையாட்டு முழுவதும் இந்திய கிரிக்கெட்டின் நிதி செல்வாக்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை டெஸ்ட் தொடரை வென்று ஆஸ்திரேலியா அணி இந்த முறையும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.