பைனல்ஸ்ல அவர் அப்படி செஞ்சிருக்க கூடாது.. இன்னும் பொறுப்பா ஆடி இருக்கணும் – இந்திய முன்னாள் வீரர்

0
144

நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்க்கார் இந்திய அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி பைனல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய இந்திய அணி லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்து விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் குவித்தது.

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் கில் 31 ரன் எடுத்து வெளியேற, அதற்குப் பின்னர் களம் இறங்கிய நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி ஒரு ரன் மட்டுமே எடுத்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவோடு பாட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

- Advertisement -

அவுட்டான விதம் சரியில்ல

62 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர் என 48 ரன்கள் குவித்த நிலையில் எதிர்பாராத விதமாக சான்ட்னரின் பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழந்த விதம் தனக்கு மகிழ்ச்சியாக இல்லை என்று கூறி இருக்கிறார். இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பை உணர்ந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இன்னொரு மோசமான தோல்வி வரவே கூடாது.. இங்கி டெஸ்டுக்கு கம்பீர் போடும் பக்கா ஸ்கெட்ச் – இந்திய முன்னாள் வீரர் வியப்பு

இது குறித்து அவர் கூறும் போது “ஸ்ரேயாஸ் ஐயர் இறுதி போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். ஆனால் இறுதியில் அவர் அவுட் ஆகி வெளியேறிய விதம் மகிழ்ச்சி அடையவில்லை. அவர் கடைசி வரை தொடர்ந்து விளையாடி ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் அவர் தனது திறனை கண்டு விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று பேசி இருக்கிறார்

- Advertisement -