புதிய கிரிக்கெட் லீக்கிற்கு ஐசிசி வைத்த ஆப்பு.. இனி வெளிநாட்டு வீரர்களுக்கு கட்டுப்பாடு!

0
3062

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் உயர் மட்ட க் கூட்டம் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் தற்போது ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெறுகிறது.

இதன் காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள் தங்களது தேசிய அணியை கைவிட்டு இந்தத் தொடரில் விளையாட செல்கின்றனர். இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தரம் குறைவதோடு வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் பெரும் அளவில் பாதிக்கப்படுகிறது.

- Advertisement -

இதனை கருத்தில் கொண்டு ஐசிசி தற்போது புதிய முடிவை எடுத்திருக்கிறது. அதன் படி, எந்த ஒரு கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்று ஐசிசி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதைப் போன்று குறைந்த பட்சம் ஏழு உள்ளூர் வீரர்கள் அல்லது அசோசியேட் நேசன் வீரர்கள் ஆகியவர்களை தேர்வு செய்து அணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஐ சி சி கூறியுள்ளது. இது பல்வேறு வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு ஆப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

யுஏஇ வில் நடைபெறும் இன்டர்நேஷனல் டி20 தொடரில் ஒன்பது வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்று இருந்தார்கள். இதைப் போன்று இன்று தொடங்கும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆறு பேர் வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

தற்போது ஐசிசி புதிய விதியின் படி அவர்களால் இனி நான்கு வெளிநாட்டு வீரர்களை தான் பிளேயிங் லெவனில் விளையாட வைக்க முடியும். இதேபோன்று வீரர்கள் வெளிநாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடும் போது தங்களுடைய கிரிக்கெட் வாரியங்களுக்கு சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று ஐசிசி வருமானத்திலிருந்து பிசிசிஐக்கு அதிகபட்சமாக 38.4% நிதியும், இங்கிலாந்துக்கு 6.89 சதவீதமும் ஆஸ்திரேலியாவுக்கு 6.25% பிரித்து வழங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இதே போன்று ஸ்லோ ஓவர் ரேட்டுக்கு இனி ஒவ்வொரு ஓவர்கள் எவ்வளவு தாமதம் ஆகிறதோ அதற்கு தலா 5% என அதிகபட்சமாக 50 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 ஓவருக்குள் ஒரு இன்னிங்ஸ் முடிவடைந்து விட்டால் அப்போது ஸ்லோ ஒவர் ரேட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.