இந்திய அணி வின் பண்ணிய இரண்டு டெஸ்ட் கிரவுண்டும் “ஆவரேஜ்”; – மோசமான ரேட்டிங் கொடுத்த ஐசிசி!

0
2191

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களுக்கு மோசமான ரேட்டிங் கொடுத்திருக்கிறது ஐசிசி.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டன.

- Advertisement -

நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 2-0 என்ற கணக்கில் முன்னிலையும் வைக்கிறது.

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகின்றன. இரண்டில் ஒரு போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடலாம். ஆகையால் முனைப்புடன் பயிற்சி செய்து வருகிறது.

அதேநேரம் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி தோல்வியுற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு விடும். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடும். ஆகையால் ஆஸ்திரேலியாவும் தோல்வியை தவிர்ப்பதற்கு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

- Advertisement -

சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களுக்கு ஐசிசி ரேட்டிங் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற ராவல்பின்டி, முல்தான் மைதானங்களுக்கு முன்னதாக ரேட்டிங் கொடுத்தது. அதன் பிறகு வங்கதேசம் அணியுடன் நடைபெற்ற மீர்பூர் மைதானத்திற்கும் ரேட்டிங் கொடுத்தது.

தற்போது இந்திய அணி விளையாடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களுக்கு ஐசிசி ரேட்டிங் கொடுத்து இருக்கிறது. இந்த இரண்டு மைதானங்களுக்கும் அவரேஜ் ரேட்டிங் கொடுத்தது பிசிசிஐக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்ட் போட்டிகள் மூன்றாம் நாள் முடிவடைவதற்குள் ஆட்டம் முடிந்து விட்டதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும், சரியான கணிப்புடன் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை என்ற காரணத்திற்காகவும் இந்த முடிவு கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.