ஐசிசி ரேங்ஸ்.. பாபரை தொட்ட கில்.. ரோகித் புதிய உயரம்.. முகமது சமி அடுத்த லெவல்.. களைக்கட்டும் தரவரிசை பட்டியல்!

0
3893
ICC

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஐசிசி தரவரிசை பட்டியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. எதிர்பார்த்த வீரர்கள் பெரிய அளவில் செயல்படாமல் போக, எதிர்பார்க்காத சில வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்தியிருக்கிறார்கள்.

சில மாதங்களாக ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கும், இந்திய இளம் வீரர் சுப்மன் கில்லுக்கும் இடையே ஒரு பெரிய போட்டி நடந்து வருகிறது.

- Advertisement -

பாபர் அசாம் முன்னணியில் இருக்க தற்பொழுது இருவருக்கும் இடையிலான புள்ளி வித்தியாசம் மிகவும் குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்த இருவரும் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் 818 புள்ளிகள் எடுத்து இருக்க, கில் 816 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியிருக்கிறார். விராட் கோலி ஏழாவது இடத்தில் தொடர்கிறார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் :

- Advertisement -

பாபர் அசாம் – 818
சுப்மன் கில் – 816
குயின்டன் டி காக் – 765
டேவிட் வார்னர் – 761
ரோகித் சர்மா – 743
ஹென்றி கிளாசன் – 741
விராட் கோலி – 735
ஹாரி டெக்டர் – 729
வான்டர் டேசன் – 706
டேவிட் மலான் – 695

மேலும் ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஷாகின் அப்ரிடி 673 புள்ளிகள் உடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். ஹேசில்வுட் 663 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், முகமது சிராஜ் 656 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

இந்தியாவின் குல்தீப் யாதவ் 646 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், பும்ரா 629 புள்ளிகள் உடன் 11வது இடத்திலும், முகமது சமி 597 புள்ளிகள் உடன் 17வது இடத்திலும் இருக்கிறார்கள்.