WTC 2025 பைனல்.. இடம் தேதி அறிவிப்பு.. அதிர்ஷ்ட மைதானம் கிடைத்ததால் இந்திய தரப்பு மகிழ்ச்சி

0
624
ICC

தற்போது நடைபெற்று வரும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதிப்போட்டி எந்த நாட்டில், எந்த மைதானத்தில், எந்த தேதியில் நடைபெறும் என்பது குறித்து ஐசிசி அறிவித்து இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்துவதின் மூலம் மைதானத்திற்கு ரசிகர்களை வரவழைத்து டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற ஐசிசி பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தி இறுதிப்போட்டியில் சாம்பியன் அணியை கண்டறிவதும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள்

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியின் முதலில் இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருந்தது. பின்பு கோவிட் கால பபுள் சிரமங்களால் சவுத்தாம்டன் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து ஏற்றி விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியது.

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியும் இங்கிலாந்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இரண்டாவது முறையாக உலகத்திற்கு சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்ல தவறவிட்டது.

- Advertisement -

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்

தற்பொழுது நடைபெற்று வரும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இறுதிப்போட்டியில் மீண்டும் இங்கிலாந்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு 2025 ஜூன் 11ம் தேதி கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

இதையும் படிங்க : 2023 இந்திய அணிக்கு நாங்க செஞ்சத ஞாபகத்துல வைங்க.. இப்ப திருத்தி எழுத போறோம் – கம்மின்ஸ் நம்பிக்கை

இந்த குறிப்பிட்ட மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானமாக இருந்திருக்கிறது. இங்கிலாந்துக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது இந்த மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்திய அணி அதிகப்படியான முறையில் வெற்றி பெற்று இருக்கிறது. எனவே இந்திய தரப்பு இந்த மைதான அறிவிப்பில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது!

- Advertisement -