ஐசிசி இறுதிப் போட்டியில் அதிக முறை தோற்ற 4 அணிகள்.. உண்மையான சோக்கர்ஸ் யார்?

0
520

ஐசிசி தொடரில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஒரு கோப்பையை கூட வெல்லாமல் தடுமாறி வருகிறது. கடைசியாக தோனி தலைமையிலான இந்திய அணி 2013 சாம்பியன்ஸ் கோப்பையை வென்றார்கள்.

அதன் பிறகு பல்வேறு போட்டிகளில் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி தவித்து வருகிறது. இந்த நிலையில்  2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது.தற்போது ஐசிசி தொடரில் எந்த அணி அதிக முறை இறுதி போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

4, நியூசிலாந்து ( 4 முறை)

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது நியூசிலாந்து. பல திறமையான வீரர்களும் கிரிக்கெட்டில் உண்மையான ஜென்டில்மேன் ஆக நியூசிலாந்து  அணி விளங்கினாலும் அவர்கள் இதுவரை வெள்ளை நிற பந்தில் உலகக்கோப்பை தொடரை வென்றது இல்லை. குறிப்பாக 2009 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி ,2015 மற்றும் 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டி, 2021 டி20 உலக கோப்பை இறுதி போட்டி என நான்கு பைனலில் அவர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். எனினும் முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணியே வென்று இருக்கிறது.

3, இலங்கை (4 முறை)

- Advertisement -

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பது இலங்கை தான். இலங்கை அணியும் நான்கு முறை ஐசிசி இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் இறுதி போட்டியில் முறையே ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணியிடம் இலங்கை தோல்வியை தழுவியது.இதைப் போன்று 2009 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் உடனும் 2012 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும் இலங்கை தோல்வியை தழுவிருக்கிறது.

2, இங்கிலாந்து (6 முறை)

இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருப்பது இங்கிலாந்து அணி தான். கிரிக்கெட்டை கண்டுபிடித்தவர்கள் என்ற பெயரை பெற்றிருந்தாலும் அவர்களால் அதிக முறை ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத துரதிஷ்டவசமான அணியாகவே விளங்கி இருக்கிறார்கள்.

1979 ஆம் ஆண்டு மற்றும் 1987 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டிகளில் முறையே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும்,  1992 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இதேபோன்று 2004 மற்றும் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வி அடைந்திருக்கிறது.இதேபோன்று 2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை  இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இங்கிலாந்து தோற்று இருக்கிறது.

1. இந்தியா ( 6 முறை)

கிரிக்கெட்டை ஒரு மதமாகவே பாவித்து வரும் இந்தியா தான் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை தவிர அதிக முறை ஐசிசி இறுதி போட்டியில் இந்திய அணி விளையாடி இருக்கிறது .மொத்தம் 11 முறை இந்திய அணி ஐசிசி இறுதி போட்டிகளில் விளையாடி ஆறு முறை தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கைக்கு எதிராகவும்,  2000 மற்றும் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் முறையே நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடம் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது.


இதேபோன்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து இடமும் தற்போது ஆஸ்திரேலியா இடமும் இந்திய அணி முறையே 2021 மற்றும் 23ஆம் ஆண்டு தோல்வியை தழுவி இருக்கிறது.