CWC23.. பாகிஸ்தான் முதல் இலங்கை வரை.. ஒவ்வொரு அணியும் செமி பைனல் போக என்ன செய்யணும்.?.. முழு கால்குலேஷன்.!

0
4646

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் டிஎல்எஸ் விதிப்படி நியூசிலாந்து அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இருந்து நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி இரண்டாவது அணியாக உலக கோப்பையில் இருந்து வெளியேறி இருக்கிறது. முதலில் நெதர்லாத இடம் தோல்வியடைந்து பங்களாதேஷ் அணி வெளியேறியது. இந்த வருட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருக்கின்றன . மீதி இருக்கும் இரண்டு இடங்களுக்கு ஆறு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் கால்குலேஷன் படி இருந்தாலும் ரியாலிட்டியில் குறைவாகவே இருக்கிறது. இந்த ஆறு அணிகளும் எவ்வாறு அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் அவை தகுதி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

ஆஸ்திரேலியா:

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்த வருட உலகக்கோப்பை தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும் அந்த அணியின் நெட் ரன் ரேட் +0.924.

- Advertisement -

மீதி இருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணி எளிதாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் நெட் ரன்ரேட் பாதிக்காத வண்ணம் தோல்வியடைந்தாலும் ஆஸ்திரேலியா அணியால் 10 புள்ளிகள் உடன் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட ஆஸ்திரேலியா அணிக்கு அரை இறுதி வாய்ப்பு உறுதி. அந்த அணி வருகின்ற ஏழாம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடனும் பதினொன்றாம் தேதி பங்களாதேஷ் அணியுடனும் விளையாட இருக்கிறது.

நியூசிலாந்து:

நியூசிலாந்து அணி இந்த வருட உலகக்கோப்பையை வெற்றியுடன் துவங்கியது. இங்கிலாந்து அணியை பத்தி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து நெதர்லாந்து பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. எனினும் இந்திய அணியிடம் நியூசிலாந்து தோல்வியடைந்ததை தொடர்ந்து வரிசையாக நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. இதனால் நான்கு வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் நெட் ரன்ரேட் +0.398.

நியூசிலாந்து அணி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இலங்கை அணியுடன் நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை தோல்வி அடைந்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீதி இருக்கும் போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி மீதி இருக்கும் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலும் அந்த அணியின் நெட் ரன்ரேட் உயரவில்லை என்றால் நியூசிலாந்து அணி தகுதி பெற்றுவிடும்.

பாகிஸ்தான்:

முன்னாள் உலகச் சாம்பியன் பாகிஸ்தான் அணி இந்த வருட உலகக்கோப்பையில் எட்டு போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றிகள் மற்றும் நான்கு தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய நியூசிலாந்து அணியுடன் போட்டியில் அந்த அணியின் நெட் ரன்ரேட் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. தற்போது பாகிஸ்தான் அணியின் நெட் ரன்ரேட் +0.036.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை விட அதிக ரன் ரேட் பெற்று இருந்தால் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். மேலும் நியூசிலாந்து அணி தனது கடைசி போட்டியில் தோல்வி அடைந்தாலும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தான் அணியும் விளையாட இருக்கும் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் அந்த அணியின் நெட் ரன்ரேட் உயராத பட்சத்தில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

ஆப்கானிஸ்தான்:
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அனைத்து அணிகளையும் உலக கிரிக்கெட் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி. அந்த அணி இதுவரை விளையாடி இருக்கும் 7 போட்டிகளில் மூன்று தோல்விகள் மற்றும் நான்கு வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் 0.330.

ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் மீதி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அந்த அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தோல்வி அடைய வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி மீது இருக்கும் இரண்டு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இலங்கை:
முன்னாள் உலகச் சாம்பியன் இலங்கை அணி இந்த வருட உலகக் கோப்பை போட்டிகளில் ஏழு ஆட்டங்களில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி மீது இருக்கும் இரண்டு ஆட்டங்களில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது.

இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும். இலங்கை அணி இரண்டு ஆட்டங்களிலும் அதிக நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

நெதர்லாந்து:
இந்த உலகக் கோப்பையில் கிரிக்கெட் உலகத்தை ஆச்சரியப்படுத்தும் வகையில் விளையாடிய மற்றொரு நாடு நெதர்லாந்து. அந்த அணி விளையாடி இருக்கும் 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் உடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

நெதர்லாந்து அணி அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கு அந்த அணி விளையாட இருக்கும் இரண்டு போட்டிகளிலும் அதிக நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மேலும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும். நெதர்லாந்து அணி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுடன் விளையாட இருக்கிறது .