கடந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் அதிகமான டி20 போட்டிகளில் விளையாடியது. காரணம் கடந்த ஆண்டு கடைசியில் இருந்த டி20 உலக கோப்பை தொடர் ஆகும். 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஆண்டுதான் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றது. இந்தியாவில் நடைபெற இருந்த இந்த தொடர் கொரோனா தொற்று காரணமாக அமீரக மைதானங்களில் நடந்தது. கேப்டன் கோலி கூட இதுதான் நான் கேப்டனாக பங்கேற்கும் கடைசி டி20 தொடர் என்று முன்னரே அறிவித்து விட்டார். அதனால் இந்த தொடர் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நினைத்தபோது அரையிறுதிச் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அதில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. இது போல அனைத்து தொடர்களையும் சிறப்பாக விளையாட வீரர்களை கருத்தில் கொண்டு ஐசிசி கடந்த ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை வெளியிட்டுள்ளது.
துவக்க வீரராக இந்த அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இங்கிலாந்து அணியின் பட்லரும் பாகிஸ்தான் அணியின் ரிஸ்வானும் தொடக்க வீரர்களாக உள்ளனர். மூன்றாவது வீரராகவும் கேப்டனாகவும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் உள்ளார். நான்காவது நிலை வீரராக தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆல்-ரவுண்டராக உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மிச்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஃபினிஷராக தென் ஆப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் இந்த அணியில் உள்ளார். இந்த அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களாக இலங்கை அணியில் ஹசரங்காவும் தென் ஆப்பிரிக்காவின் ஷாம்சியும் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளராக பாகிஸ்தானின் அப்ரிடி, ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் மற்றும் வங்கதேச அணியின் முஸ்டபிசுர் ரஹ்மான் உள்ளனர்.
ஐசிசி வெளியிட்ட 2021 ஆண்டுக்கான சிறந்த டி20 அணி
பட்லர், ரிஸ்வான், பாபர், மார்க்கம், மார்ஷ், மில்லர், ஹசரங்கா, ஷாம்சி, ஹேசல்வுட், முஸ்டபிசுர் மற்றும் அப்ரிடி.